Primary tabs
அரசன் ஆணையால், முதலையைப் பலர் பலவாறு துன்புறுத்திக் கொன்றனரென்க.
சலாகை - இருப்புக்கோல். அலை, முதல்நிலைத் தொழிற் பெயர். (22)
சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
(இ-ள்.) சந்திரமதி - சந்திரமதி, நாய் - நாயும், கருநாகம்ஆய் - கரும்பாம்புமாய்ப் பிறந்து, வந்து - (பின்பு இவ்வாற்றில்) வந்து பிறந்து, வார் வலைப் பட்ட - நீண்ட வலையிலகப்பட்ட, கார - முதலை, மரித்து - இறந்து, அந்தில் வாழ் - அவ்வுஞ்சயினியில் வாழும், புலையாளர் சேரிவாய் வந்து - புலையர்சேரியில் வந்து, ஓர் ஆட்டின் மடப்பிணை ஆயது - ஓர் ஆட்டின் வயிற்றில் பெண்ஆடாய்ப் பிறந்தது.
நாயும் பாம்பும் முதலையுமான சந்திரமதியின் உயிர் சேரியில் பெண்ணாடாய்ப் பிறந்த தென்க.
பிணை - ஆடு முதலியவற்றின் பெண். மடம், இளமை, ஆடு, யாடு என்பதன் மரூஉ. தம், சாரியை. (தொல். எழுத். 191). (23)
(இ-ள்.) மற்றை மீனும் - அந்த உலோகிதம் என்னும் மீனும், ஓர் வார் வலை பட்டதை - நீண்டதொரு வலையில் அகப்பட்டதை, அற்றம் - அச்சமயத்தில், அருள் இல் அந்தணர் கண்டனர் - அருள் இல்லாத சில அந்தணர்கள் கண்டு, (அரசனை யடைந்து), கொற்றம் மன்னவ - வெற்றி வேந்தே, நின் குலத்தார்களுக்கு - உன் குலத்து முன்னோர்.