தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 223 -
194. 
இவர்க ளென்கடைக் காவல ராயவர்1
 
இவர்க ளென்படை நாயக ராயவர்2
 
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர்
 
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.

(இ-ள்.) இவர்கள் - --, என் கடைக் காவலர் ஆயவர் - என் அரண்மனை வாயில் காத்த காவலாரானவர்; இவர்கள் - --, என் படை நாயகர் ஆயவர் - என் சேனைத்தலைவர்களா யிருந்தவர்; இவர்கள் - --, என் இசை பாடுநர் - என் புகழை இசைத்துப் பாடுபவர்; இவர்களும் - --, ஆடுநர் - நடன மாதர்களாவர்; இவர் என் பரிவாரம் - இவர்கள் என்பரிசனங்களாவர். (எ-று.)

இவர்களனைவரும் என்னைச்சார்ந்தவர்களே என்றெண்ணினா னென்க.(40)

195. 
என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்
 
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி
 
மன்னு தன்மறை யானொருட வைகுமோ
 
என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.

    (இ-ள்.) அன்ன மெல் நடையாள் - அன்னம்போலும் மென்மையான நடையி்னை யுடையளான, அமிர்தமதி - --, என்னை - --, நஞ்சுபெய்து - விஷமிட்டுக்கொன்று, இன்னணமாய் இழைத்து - இவ்வாறு துன்பமுறச் செய்து,  மன்னும் தன்மறையானொடு - தன்னைச் சேர்ந்த சோரநாயகனுடன், வைகுமோ - காலங் கழிக்கின்றளோ! (அல்லது), என்னை செய்தனளோ - வேறு யாது செய்தாளோ! இவண் இல்லையால் - இவ்விடத்தே காணப்படவில்லையே! (எ-று.)

அமிர்தமதி, நம்மை நஞ்சூட்டிக் கொன்றபின்  யாதுசெய்தாளோ என்று ஐயுற்றானென்க.

இழைத்த என்று பிரித்தால் அசரம் தொக்கதென்று கொள்க. மன்னுதல் - நிலையாயிருத்தல்.  என்ன என்றும் பாடம்.  அமிர்தம்மதி, விகாரம்.  (41)

1 ராபவர், ராமவர்,

2 ராமிவர்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:20:42(இந்திய நேரம்)