தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 228 -

(இ-ள்.)  உழையாளர் - பணியாளர், வரை செய்தோள் மன்ன - வரையெனத் திரண்ட தோள்களையுடைய வேந்தே !  வணிகர் மயிடத்தால் - (அயல் நாட்டு ) வணிகர்கொண்டுவந்த எருமையினால், நம் - நம்முடைய, அரைச அன்னம் எனும் பெயர் ஆகும் - ராஜஹம்ஸம் என்னும் பெயரையுடையதாகிய, அரைச வாகன மாயது - ராஜவாஹனமாகிய குதிரை, போயது என்று - இறந்துவிட்ட தென்று, அரசற்கு -அரசனுக்கு, உரை செய்தார் - உரைத்தனர்.

செய், உவமவுருபு, அரைசவன்னம், அரைச வாகனம் இவற்றில் ஐகாரம், போலி, உழையாளர் - ஈண்டுக் குதிரையுடன் சென்றவர்.                (48)

ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று
அரசனுக்கு அறிவித்தன ரென்க.

203. 
அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன்
 
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
 
பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான்
 
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர்.

(இ-ள்.) அணிகொள் மாமுடி மன்னன் - அழகியசிறந்த முடியணிந்த வேந்தன், அழன்றனன் - கோபமுற்றவனாகி, வணிகர் பொருள் - வணிகர் கொணர்ந்த பல பொருள்களையும், வாரி - வாரிக்கொண்டு, மயிடமும் பிணி செய்து - அவ்வெருமையையும் பிணித்து, எம் உழை - எம்மிடம், வம் என -வருக என்று, பேசினான் - கட்டளையிட்டான் சென்று - அவ்வுழையவரும் போய், கணிதம் இல்பொருள் - கணக்கிட முடியாத பொருள்களை, கவர்ந்தனர் - கொள்ளை கொண்டனர். (எ-று.)

   ஏவலர், அரசன்கட்டளையால் வணிகர்பொருள்களைக் கவர்ந்தனரென்க.

   வம், வாரும் என்பதன் விகாரம்.  அழன்றனன் முற்றெச்சம்.           (49)

204.
அரச னாணை யறிந்தரு ளில்லவர்
 
சரண நான்கினை யுந்தளை செய்தனர்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:21:31(இந்திய நேரம்)