தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 227 -

அயல் வந்து - சிருப்பிரையாற்றின் கரையில் போந்து, மகிழ்ந்துவிட்டார்கள் - மகிழ்ந்துதங்கினார்கள்.  (எ-று.)

எருமையுடன் போந்த வணிகர் சிருப்பிரையாற்றயல் தங்கினார்க ளென்க.

எருமைமேல் ஏற்றி வந்த பண்டம் பித்தளைச் சாமான் முதலியன வென்று கன்னட புராணத்திலுளது,  நாட்டிற்கு அணியாவன; ‘ பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம், அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து‘ என்னும் திருக்குறளால் அறியலாகும்.  விடுதல் - தங்குதல்.      (46)

201. 
தூர பாரஞ் சுமந்த துயரது
 
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்
 
ஆர மூழ்குவ1 தம்மயி டங்கரை
 
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.

  (இ-ள்.) தூரம் பாரம் சுமந்த துயர் அது தீர - நெடுந்தொலைவிலிருந்து சுமை சுமந்துவந்த வருத்தம் நீங்க, ஓடும்-நீர் பெருகியோடும், சிருப்பிரை ஆற்றின் உள் - --, ஆரமூழ்குவது - நன்றாக மூழ்குவதாகிய. அம்மயிடம், - அந்த எருமை, கரை சேரும் மாவினை - கரைக்கு வரும் (அரசன்) குதிரையை, சென்று எறிந்திட்டது - (அதன் அருகில்) சென்று குத்திக் கொன்றுவிட்டது. (எ-று.)

ஆற்றில் முழுகிய எருமை, குதிரையைக் கொன்றதென்க.

சுமந்த துயர், சுமந்ததனால் உண்டான துயர்; எச்சம் காரணப் பொருளில் வந்தது.  ஆர - நிறைய; உடல் முழுவதும் தண்ணீரில் பொருந்த.           (47)

202. 
வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்
 
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம்
 
அரைச வாகன மாயது போயதென்
 
றுரைசெய் தாரர சற்குழை யாளரே.

 

1 மூழ்கிவந்.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:21:21(இந்திய நேரம்)