தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 232 -

மனம் கொளா - மனத்தில் நினைப்பதற்கும் இயலாத, ஒருமானுட நாயினை - நாய்போன்ற நீகனை, கலந்தனள் -கூடிக் கலந்தாள். (எ-று.)

    அரசனை யொழித்து நீசனைச் கூடினாளென்றா ரென்க.

அண்ணல் - தலைவன். கனம் - மிகுதி.  கலக்குதல் - நிறையழித்தல். (யசோ. 105ல்) ‘புண்களும் கண்கள் கொள்ளா‘ என்றாராகலின், ஈண்டு, ‘மனங்கொளா, நாய்‘ என்றார். ஒரு, இழிவினை உணர்த்திற்று.  கொளா - கொள்ளாத; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.        (54)

209. 
குட்ட மாகிய மேனிக் குலமிலா
 
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
 
நட்ட மாகிய நல்லெழின் மேனியள்
 
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.

   (இ-ள்.) (அமிர்தமதி), குலம் இலா - குலநலம் இல்லாத, குட்டமாகிய மேனி - குட்டநோய் மிக்க உடம்பினையுடைய, அட்டபங்கனோடு - --, ஆடி அமர்ந்த பின் - (காமவிளையாட்டில்) ஆடிச் சேர்ந்தபிறகு, (அதனால்), நட்டம் ஆகிய நல் எழில் மேனியள்- சிறந்த அழகு கெட்டுப்போன உடம்பினளாகி, குட்டநோயில் - --, குளித்திடுகின்றனள் - மூழ்கியுள்ளாள். (எ-று.)

அரசி, பாகனைச் சேர்ந்த பின் அழகு கெட்டுக் குட்டநோயுற்றாளென்க.

மேனி - சரீரச் சாயல்; ஒளி.            (55)

210. 
அழுகி நைந்துட னஃகு மவயவத்
 
தொழுகு புண்ணி னுருவின ளாயினள்
 
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
 
தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.

(இ-ள்.) (அரசி), அழுகி நைந்து - அழுகிமெலிந்து, உடன் அப்பொழுதே, அஃகும்  அவயவத்து - குறையும்   அவயவங்களோடு,    ஒழுகு  புண்ணின்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:22:10(இந்திய நேரம்)