Primary tabs
யில் தொழுநோயும் மறுபிறவியில் நரகமெய்துவதற்குக் காரணமாகிய தீவினைகளும் உற்றதனால் ‘ இம்மைச் செய்தவினைப்பயனே இவை ‘ என்றும், மறுமையில் நரகப் பிறவியோடு அமையாது பின் எய்தும் ஒவ்வொரு பிறவியிலும் துன்புறுதற்குக் காரணமான கொலை முதலியன செய்தாளாதலின், ‘எம்மை யும்மினி் நின்றிடு மிவ்வினை‘ என்றும், அதற்கு யாதொரு சந்தேஹமும் இல்லை யென்பார், ‘பொய்ம்மை யன்று‘ என்றும் கூறினர். ‘இவை‘ என்றது, மேனி எழில் கெட்டது, குட்டம் பற்றியது முதலியவற்றை. பொன்றில என்றும் பாடம். (57)
(இ-ள்.) (இவ்வமிர்தமதி), நோயின் ஆசைகொல் - தொழுநோய் காரணமாகத் தோன்றிய ஆசையினாலோ, நுண் உணர்வு இன்மை கொல் - நுண்ணிய அறிவு இல்லாமையாலோ, தீயவல்வினை தேடுதல் ஏ கொலோ - கொடிய தீவினையை ஈட்டுதற்காகவோ, மேயமேதிப் பிணத்தை-விரும்பிய எருமையின் ஊனை, மிசைந்தனள் - உண்டனள்; மற்று - அதுவேயுமன்றி, இது தன்னையும் -இவ்வாட்டினையும், மாய - மாயும்படி, வவ்வும் - (தின்ன) விரும்புகின்றாள்.
சேடியர், அரசியை இங்ஙனம் இழித்துக் கூறினரென்க.
இதற்குமுன் புலால் உண்ணாதவளாதலின் இங்ஙனம் கூறினர். ‘மாயம்’ என்று பிரித்து, இது ஆச்சர்யம் எனலுமாம். வவ்வுதல்- அபகரித்தல்; கைப்பற்றுதல். கொல், ஐயம்.
பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர்
கூறியதனை அறிந்து வருந்துதல்