தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 253 -
 
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்1
 
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.

(இ-ள்.) உறுபொருள் நிலைமை தன்னை - (அறிதற்கு) உற்ற உயிர் முதலிய பொருள்களின் நிலைமையினை, உற்று உணர்வு  -உள்ளவாறு உணர்தல்,  அறிவு ஆகும் - நன்ஞானம் ஆகும்:  அறிபொருள்  அதனின்  - அறிந்த அப்பொருள்களின்.  தூய்மை - தூய தன்மையில் (உண்மைத் தன்மையில்), அகத்து எழும் - மனத்தில் தோன்றும், தெளிவு - --, காட்சி - நற்காட்சியாகும்:  நறுமலர்  பிண்டி நாதன் -வாசனையுள்ள மலரையுடைய பிண்டியின் கீழமரும் ஆதிபகவன் அருளிய, நல்அறப் பெருமை தன்மேல்இறுகிய மகிழ்ச்சி - சிறந்த அறிவு காட்சி இரண்டின்  சீர்மையிலும் முதிர்ந்த மகிழ்வுடன் பொருந்திநிற்றல், இதனது பிரிவும் ஆகும் - இறைவனருளிய அறத்தின்  பிரிவாகிய ஒழுக்கமும் ஆகும், என்றான் - என்று  கூறினார்.  (எ-று.)

அறிவது ஞானம், அதனைத் தெளிவது தரிசனம், ஞான தரிசனமே நல்லறம்:  அவ்வறத்தில்  மிகுந்த  மகிழ்வோடு நிற்றல் ஒழுக்கம்  என்றாரென்க.

இதுவும் முன்வருஞ் செய்யுளும் ஒரு தொடர். தூய்மை - குற்றம் இல்லாத தன்மை.  தெளிவு - தெளிதல்: நம்புதல்.  உள்பொருளிதுவென வுணர்தல்  ஞானமாம், தெள்ளிதி னப்பொருள் தெளிதல் காட்சியாம்,  விள்வற விருமையும் விளங்கத் தன்னுளே, ஒள்ளிதிற் றரித்தலையொழுக்க மென்பவே‘  (சீவக: 2845) ‘ உரைத்தவிப் பொருளின் மெய்ம்மை யுணர்வது நல்ல ஞானம், புரைப்பறத்தெளிதல் காட்சி பொருந்திய விரண்டு மொன்றிற், றரித்தல் நல் லொழுக்கமாகும்‘ (மேரு, 107). இச்செய்யுட்கள் ஈண்டு ஒப்புநோக்கற் பாலன.

பிண்டி - அசோகு:  இது இறைவன்சிறப்புவகைகளுள் ஒன்று.

 

1 தன்பால்.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:25:36(இந்திய நேரம்)