Primary tabs
கோழிகள் முற்பிறவியின் இன்னலை நினைந்து மகிழ்ந்து தர்மாம்ருதத்தினால் தூயசெயல் பெற்றனமென்று எண்ணின என்க.
பிறவியின் விடுதலைக்குக் காரணமான திருவறத்தை மேற்கொண்டனவாதலின், “பிறவியின் மறுகு வெந்நோய்பிழைத்தனம்‘ என்றன என்க. இனி பெயர்ந்தன பிறவிகள்அனைத்தும் என்று இயைத்துப் பொருள் கோடலும் அமையும். சென்று என்பது எச்சத்திரிபு. அன்று, ஏ: அசைகள். (29)
(இ-ள்.) (கோழிகள்), அறிவரன் சரணம் மூழ்கி - இறைவன் திருவடிகளை வணங்கி, அறத்து எழும் விருப்பம் - திருவறத்தின்மேல் தோன்றிய விருப்பத்தினால், உள்ளா (திரும்பவும் முனிவர் அருளியவற்றை) நினைத்து, குறைவிலஅமுதங்கொண்டு - அதிகமாகிய அறவமுதத்தை உட்கொண்டு, அகம் குளிர்ந்து - மனம் குளிர்ந்து, மகிழ்ந்துகூவ - களித்துக் கூவ, (அவ்வொலி), செறி பொழில் அதனுள் - மரம் முதலியன நெருங்கியிருந்த சோலைக்குள், சென்று - --, மன்னன் செவியின் உள் இசைப்ப - யசோமதியின் செவியில் ஒலிக்க(க் கேட்டு அதனால் சினங்கொண்ட அரசன்), முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து - புன்சிரிப்பைக் கொண்ட வாயினையுடைய மாதர்களின் முன்னால், ஒரு சிலை வளைத்தான் - ஒப்பற்றவில்லை வளைத்தான். (எ-று.)
கோழிகள் அறம் மேற்கொண்டதனால் மகிழ்ந்து கூவிய ஒலியைக் கேட்ட மன்னன் சினந்து வில்லை வளைத்தா னென்க.
தன் தேவியர்முன் வில் வளைத்தது, தன் விற்றொழிலையும் சப்தவேதி பாணத்தின் தன்மையினையும் அவர் அறிந்து
1