Primary tabs
‘கேட்டலும்‘என்பதில் உள்ள உம்மை விரைவுப் பொருளைத் தந்தது. கெழுமுதல் - சேர்தல்: பொருந்துதல் எனினுமாம். ‘ஒட்டியசினம் ‘ என்றது, வீதராகன் என்றாற்போல நின்றது. உறுவதம் - தம் சக்திக்குத் தக்கவாறு பொருந்திய விரதம், உய்ந்து என்பது எச்சத்திரிபு. வீடுபேறு எய்துவிக்கும் நற்காட்சி அடைவதற்கு மூலகாரணம், ‘நல்லூழ்க்காலம்‘ (பான்மைக் காலம்) என்பர்: இதனை ஐந்துவித லப்திகளில் க்ஷயயோபசம லப்தியென்பர். இனி, பான்மை -பவ்யத்வம்: ‘அந்தமுண்டாகும் பான்மை யருந்தவர்க்கு‘(மேரு, 409) என்பது அறிக. கோழிகளாயிருந்த உயிர்களும் விரதம் மேற்கொண்ட தன்மையை வியந்து, ‘பாட்டருந் தன்மைத்தன்றே பான்மையின் பரிசு தானும் என்றார். பாடுதல் - புகழ்ந்து சொல்லுதல். (28)
(இ-ள்) (அக்கோழிகள்), பிறவிகள் அனைத்தும் - (தாம்) பிறந்த பிறப்புக்களனைத்தும், நெஞ்சில் பெயர்ந்தன நினைத்து - தம் (பழம் பிறப்புணர்வினால்) நெஞ்சில் மீளவும் நினைத்து, முன்னர் - --, மறவியின் மயங்கி - மோஹனீயத்தால் மயங்கி, மாற்றின் மறுகினம் - பிறவியில் சுழன்றோம்: மறுகு சென்று - அச்சுழற்சி நீங்க, அற இயல் அடிகள்தம்மால் - அறத்தின் இயல்பினையுடைய இம்முனிவரருரையினால், அறவமிர்து ஆரப்பெற்றாம் - திருவறமாகிய அமிர்த்தினை நிறையப் பருகினோம்: (ஆதலின்), பிறவியில் - --, மறுகும் - சுழலும், வெந்நோய் - கொடிய நோயினின்றும், பிழைத்தனம் - உய்ந்தோம், என்ற - என்று கூறிக் கொண்டன. (எ-று..)
1