Primary tabs
தீவினையால் நரகத்தும் விலங்கினும் துன்புற்றதை, ‘பின்னாள் இடர்செய்த முறைமை ‘என்றான். கோழிப் பிறப்பில் கேட்டதிருவறத்தாலெய்திய நன்மை முதலியவற்றைக் குறித்து, ‘இறைவன தறத்தது பெருமை‘ என்றான். (92)
(இ-ள்.) இருநில முடிவேந்தே - பெரிய பூமிக்குத் தலைவ, செய்த வெம் தியக் கொலை - மாவினாற் செய்த விருப்பமுள்ள கோழியின் கொலையாகிய, ஒரு துகள் தனில் - ஒருசிறிய தீவினையினால், சென்று உறும் பவம் தோறும் - தாம் சென்றடையும் ஒவ்வொரு பிறவியிலும், வெந்துயர் எய்துமாயிடில் - கொடுந் துன்பம் எய்துமாயின், இஃது தீர்ந்திடாக் கொலை - விலங்கினங்களோடு மனிதரைப் பலியிடும் இக்கொலை தீராத துயரந் தருங் கொலையாகும்: (ஆதலின்), இவண் - இவ்விடத்தே, மையல் கொண்டு -(மோஹனீயத்தால்) அறிவு மயங்கப்பெற்று, மன்னுயிர் எனைப்பல - பல்வேறு உயிர்களை, வதைசெய வரும் பாவத்து - பலியிடுவதனால் (வதைப்பதனால்) வரும் பாவ வினையினால், எய்தும் ---, வெம்துயர் - கொடுந்துன்பம், எப்படித்து என்று - எத்தன்மையதாகும் என்று, உளைந்து - மனம் வருந்தி, இரங்குகின்றனம் - (அதற்காகவே யாங்கள் வருந்துகின்றோம், என்றான் - என்று அபயருசி மொழிந்தான்.
மாக்கோழியின் பலியே இத்துணைத் துயர் விளைக்கு மெனின், எண்ணிலா உயிர்களைப் பலியிடும் நுமக்கு எத்துணைத்துயர் விளையுமோ என்று இரங்குகின்றோம் என்றானென்க.
‘வெந்துயர்‘ என்பது இரண்டிடத்தும் கூட்டபட்டது. வெம்(மை) - (தெய்வ) விருப்பம். ‘தியக்‘ - திர்யக் என்பதன் திரிபு