தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 318 -

குருவாணையால் சரியைக்கு வந்தவர் யாங்களேயென்றானென்க.

அனசனம் - உபவாசம். ‘அனசனத் தவத்தினோடருந்தவம்‘ என்றார் வாமனமுனிவரும்.  ‘வில்லினதெல்லை கண்ணால் நோக்கி‘ வந்தவர் (யசோ.28) ஆதலின்.  ‘மெல்லவந்தார்‘ என்றார்.  தம்மைப் பிறர்போல் கூறிவந்தவன் இறுதியில் உண்மை வெளியிட்டான்.  இவ்வாறு கூறும் வழக்கினைச் சீவகசிந்தாமணி 395-7ல் காண்க.  ஓர் உடை உடுத்தவர் க்ஷுல்லகர் (கோவணம் மட்டும் உடுத்தவர்‘ஜலக்) என இன்றும் வழங்குவர்.                     (91)

311. 
இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
 
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும்
 
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
 
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.

(இ-ள்.) எண்ணின் - ஆராயுமிடத்து, எமரதும் எமதும் பிறவி மாலை - எம்தமர் எய்திய பிறவித்தொடர்பும் எம்முடைய பிறவித்தொடர்பும், இனையது - இத்தகையதாகும்:  வினைகள் பின்னாள் - தீவினைகள் (தாம் பயனளிக்க வேண்டிய) பின்னைநாளில், இடர் செய்த முறைமைதான்உம் இனையது - துன்பம் விளைத்த வகையும் இத்தகையது: வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின் இனையது - சினம் காமம் முதலியவற்றால் அடைந்த இயல்பை ஆராயுமிடத்து இத்தகையதாகும்: இறைவனது அறத்தது பெருமை தான் உம் - இறைவனறத்தின் பெருமையும், இனையது - --, என்றான் - என்று அபயருசி கூறினான்.  (எ-று.) -

தமதுபிறவிமுதலியவற்றின் இயல்பைக்கூறினானென்க.

எமர் - எம்தமர்: உறவினர்.  தேவ, நரக கதியை யெய்திய அசோகனையும் சந்திரமதியையும் குறித்து எமர் எனவும், மயில் நாய் முதலிய பிறவியில்  எய்திய  தம்மை எம தென்றும் கூறினான்.  பலி முதலியவற்றாலாய




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:36:14(இந்திய நேரம்)