தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium-யசோதரன் கதைச்சுருக்கம்


யாசோதரன் கதைச் சுருக்கம்

இந்நிவுலகில் சிறப்புற்றோங்கிய ஒளதேய நாட்டின் திலை நகரம் ராஜமாபுரமென்பது.  அந்நாட்டிற்கு வேந்தன் மாரிதத்த னென்பான்.  அவனும் நகரமாந்தரும் ஒருநாள் இளவேனிற் பருவத்தில் நீர் விளையாட்டுக்குச் சென்றனர்: அப்பொழுது நகரமாந்தர் கூறிய உரையை மன்னன் மேற்கொண்டு மாரிக்கு நரபலியிடக் கருதி, இலக்ஷணமமைந்த ஆணும் பெண்ணுமாகிய இரட்டையரைக் கொணருமாறு தன் தளவரனை ஏவினான். அன்று சுதத்தாசார்யர் என்னும் முனிவரர் சங்கத்தோடு அந்நகரப்புறச் சோலையில் வந்து தங்கி, தம் நியமப்படி தாம் உபவாச தபத்தை மேற்கொண்டு, சங்கத்திலுள்ள இளைஞர்களாகிய அபயருசி அபயமதி என்ற இரட்டையர்களை அந்நகருட் சரியைக்குச் சென்று வருமாறு பணிக்க, அவர்களும் அவ்வாறே சென்றனர். அவ்வமயம் மன்னனால் ஏவப்பெற்ற தளவரன் அவர்களைக் கண்டு, காளிக்கு நரபலியிடத் தகுந்தவர்கள் இவர்களே என்று தன் ஏவலரை ஏவி அவர்களைப் பிடித்துச் சென்றான். இளைஞரும் சிறிதும் அச்சமின்றி இறைவன் வழிபாட்டோடுச் சென்றனர். அவர்களைக் காளியின் எதிரில்நிறுத்தி மன்னன் தானே பலியிட வாளோங்கும் சமயத்தில் நகரமாந்தர் இளைஞரை நோக்கி, ‘மாரியின் அருளால் நீடுவாழுமாறு உங்கள் வாயால் கூறுங்கள்’ என்றனர்: உடனே அபயருசி புன்சிரிப்புடையனாகி, ‘இம்மன்னன் பலியிடுந் தீயதொழி்லை விட்டு அருளுடன் நீடுவாழ்க’ என்று ஆசி கூறினான்.  அதனைக் கேட்ட மன்னன் மனந்தளர்ந்து அவர்களை உற்றுநோக்கி, ‘இளையீர், நீவிர் மரணத்தறுவாயிலும் அச்சமின்றி, சிரித்தகாரணம் யாது?’ என்றுவினவினான்.

அறிஞனாகிய அபயருசி யாம் நற்காட்சியுடையோம்; ஆதலின், அச்சமிலரானோம்: அதுவேயுமன்றி, முற்பிறவியொன்றில் யாங்கள்மாக்கோழியைப் பலியிட்ட தீவினையினால் விலங்கினங்களில் பிறந்து துன்புற்றுளோம்: தாம் எண்ணிலா வுயிர்ப்பலியிட்டு வருதலால், எத்துணைத்துயர் விளையுமோ! என்று எண்ணிச் சிரித்தோம்’ என்றான். மன்னன் வியந்து, “நீவிர் நும்பழம் பிறவிகளின் வரலாறுகளைப் புகலுவீராக” என அபயருசி கூறுவானாயினான்.

“இவ்வுலகில் வளந்தங்கிய உஞ்சயினிமா நகரத்திற்கு வேந்தன் அசோகன் என்பான். அவன் தேவி சந்திரமதி யென்பாள். அவர்கட்கு யசோதரன் என்னும் ஓர் தனயன் பிறந்து வளர்ந்து அரசனுக்குரிய கலைகளைப் பயின்று அமிர்தமதி யென்னும் பெண் ணரசியை மணந்து இன்புற்று வருங்கால் யசோமதி என்னும் புதல்வன் பிறந்தான்.  போனைக் கண்டு பேருவகை யெய்திய அசோகன்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:38:16(இந்திய நேரம்)