தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



ஸர்க்கங்களில் அடங்கிய இதிகாஸ காவியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  வாதிராஜருடைய (ஆகா) ஆதாரமொவென்றால் குணபத்ரருடைய உத்தரபுராணம்’ என்று இந்திய இலக்கிய வரலாறு என்னும் நூல்1 கூறுகின்றது.  ஆயின், இவன்சரிதம் குணபத்ரர் இயற்றியுள்ள உத்தரபுராணத்துள் ஓரிடத்திலும் காணப்படவில்லை; தமிழிலுள்ள ஸ்ரீபுராணத்திலும் இச்சரிதம் கூறப்படவில்லை.  சிலர் வடமொழி பத்மபுராணத்தில் இவ்வரலாறு விரிவாகக் கூறப்பட்டுளதென்று கூறுகின்றனர்.  அது எனக்குக் கிடைக்கவில்லை.

வடமொழியில் வாதிராஜ ரியற்றிய யசோதர சரிதமேயன்றி, பூர்ணதேவ ரியற்றிய யசோதர காவியமும், சோம தேவசூரி யியற்றிய யசஸ்திலக சம்புவும் பிரசித்தமாக வழங்குகின்றன.  இவற்றுள் யசஸ்திலக சம்பு என்பது விரிவாகக் கூறுகின்ற சிறந்த காவியமாகும்.  ஜீவ தயாஷ்டமி நோன்பு கதையிலும் இவ்யசோதரன்கதை காணப்படுகிறது.

வடமொழி யசோதா சரிதத்தின்  ஆசிரியராகிய வாதி ராஜ சூரி யென்பவர்,  கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்றும், அவ் வாதிராஜரே இத்தமிழ்க்காவியத்தையும் செய்தவராவர் என்றும் யசோதரசரிதத்தைப் பதிப்பித்தத் தஞ்சை ஸ்ரீ S. குப்புசாமி சாஸ்த்ரி அவர்களும், அந்நூலுக்கு முன்னுரை யெழுதியுள்ள T.A.கோபிநாத ராயரவர்களும், தமிழ்க் காப்பியத்தைப் பதிப்பித்த தி, ஸ்ரீவேங்கடராமய்யங்காரவர்களும் எழுதியுள்ளனர். அஃது இன்னும் ஆராய்தற்பாலது.

தமிழிலுள்ள யசோதர காவியம் காஞ்சிபுரம் ஸ்ரீபாகு பலி நயினாவர்களால் 1869-ஆம் ஆண்டில் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.  பின்னர் தில்லையம்பூர் ஸ்ரீவேங்கடராமய்யங்கார் அவர்களால் 1908-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டுளது.  அப்பதிப்பு, ஜைன சமய விளக்கம், கதைச் சுருக்கம், பாடபேதம் முதலியவற்றையுடையதாய்ச் சிறந்து விளங்குவது,  அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக

 

1 Writernity: History of Indian Literature; Jaina literature. Vol. II p.535.

 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:38:56(இந்திய நேரம்)