Primary tabs
புஸ்தகத்துக்கு முன்பணம் தந்து உதவியவர்கள்
இவர்கள் உதவி காலத்தாற் செய்யப்பட்டதாகலின் ஞாலத்தினும் பெரிதாகக் கொள்ளப்படும். இவர்களுக்கு எல்லா நன்மையும் உண்டாம்படி வாழ்த்துவதன்றி என்னாற் செய்யத்தக்கது வேறில்லை. இவ்வுரைக்குப் பாராட்டுரை நல்கிச் சிறப்பித்த பெரியார்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகின்றேன்.
சிற்றறிவினையுடைய யான் எழுதியுள்ள உரையில் உள்ள குற்றங் குறைகளை அறிஞர் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
தோன்றத் துணையாயிருந்து அடியேனைக்கொண்டும் இப்பணியைச் செய்வித்தருளிய குருக்களையும் சாசனதேவதைகளையும் வணங்கி வாழ்த்துகின்றேன்.
இங்ஙனம் : அடியேன்
வீடூர் - பூர்ணசந்திரன்