தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


v

வனே புராணம் என்பதைப் புராதனன் ஆகமவேத கீத புராண ரூபமொழித்து வெங்கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடுரை செய்குவான் என வில்லிபுத்தூராழ்வார் கூறுகின்றனர். வேட்டுறில் சிவ பதவியே வேட்டுற விரும்பிக் கேட்டுறில் சிவபுராணமே கேட்டுற வேண்டும் என்றனர் கந்தபுராண ஆசிரியர். ஆகவே , புராணங்களைக் கற்கவேண்டும் கேட்கவேண்டும்.

தாளாண்மை யில்லாதார் வேளாண்மை செலுத்துவதும் தரைமே லென்றும் வேளாண்மை யில்லாதார் மனைவாழ்க்கை செலுத்துவதும் விசயம் வேட்டு வாளாண்மை யில்லாதார் மண்டுசமர்க் கேறுவதும் வளர்பு ராணங் கேளாதார் கதிவிழைவும் விழியில்லார் வழிநடக்குங், கிரம                                          
 
மாமால்

என்றனர். குற்றாலத் தலபுராண ஆசிரியர்.

சித்தாந்த சாத்திரத்தில் சிறப்புடைய புராணங்கள்” உணர்த்தும் என்றனர், பெரிய புராணம் திருவிளையாடற் புராணம் கந்தபுராணம் காஞ்சிப் புராணம் காளத்திப் புராணம் தணிகைப் புராணம் கோயில் புராணம் சேதுபுராணம் குற்றாலத் தலபுராணம் இவைகளெல்லாம் சொல்லழகு பொருளழகு நடையழகுகளாற் சிறந்து சித்தாந்த சாத்திரத்தைத் தழீஇ இருப்பதால் சிறப்புடைய புராணங்கள் என்றனர்.

இப் புராணங்களுள்ளும் காஞ்சிப் புராணம் மிகச் சிறந்ததாகும். சிவபெருமான் விச்சுவாதிகரும் விச்சுவகாரணரும் விச்சுவாந்தரியாமியும் விச்சுவரூபியும் விச்சுவசேவியரும் ஆவரென்னும் வேதாந்த நூற்றுணிபை வற்புறுத்தி இகபரத்தில் துயருற்று வாழும் உலகத்தவர் அதனை மாற்றிப்போக மோட்சங்களை எய்துதற்குச் சரண்புகுத வேண்டிய முழுமுதற் பொருள் சிவபெருமானே யெனச்சிவபரத்துவத்தைத் தெளியவுணர்த்துவனவாகும். ஆதலால் நம் முன்னோர்கள் நற்பாலர் வேண்டின் மயிலம்மையார் தவம் நாடுக, நூல்கற்பான் விரும்பில் சிவஞானதேவன் கலையுணர்கவென்று கூறினர். மேலும் இக்காஞ்சிப் புராணம் செய்தருளிய சிவஞான முனிவர் வடநூற்கடலும் தென்றமிழ்க் கடலும் நிலைகண்டுணர்ந்தவர். இவர்களியற்றிய நூல் பலவும் இவர்கள் பிரபந்தத் திரட்டிற் காணலாம். இலக்கணம் சமயம் தருக்கம் மொழிபெயர்ப்பு மறுப்புக்கள் முதலிய பல துறைகளிலும் தலைசிறந்தவர். இவர்கள் நூற்புலமையோ டில்லாமல் சிவஞானங் கைவரப் பெற்றவர். யோகிகள் சிவஞான போதத்திற் கெழுதிய மாபாடியத்தைப் படிக்க இவர்கள் சிவானுபவம் தெரியும். வடமொழியிலுள்ள பிர்ம சூத்திரத்திற்குச் சங்கரர் இராமானுசர் நீலகண்டர் மாத்துவர் இந்நால்வரும் பாடியம் செய்துள்ளார்கள். சைவ சித்தாந்தத்திற்கு முதல் நூலாகிய சிவஞான போதத்திற்கு, இவர்கள் சிவஞான


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:03:15(இந்திய நேரம்)