தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


xLiv

முக்களாலிங்கர் தவச்செல்வர்களைப் பிரியமாட்டாராய்ப் பெரிதும் வருந்தக்கண்ட அத்தவத்தவர்கள் புதல்வரைத் தம்மொடும் அனுப்பக் கேட்டனர்.

தந்தை தாயார் பெறலரிய செல்வரைத் தம் உயிரினும் நன்கு மதித்தும் உலகோபகாரமாக வந்த மகனாரை அவர் விருப்பப்படி உடன்செல்ல இசைந்தனர்.

முனிவர்கள் முக்களாலிங்கரொடும் சுசீந்திரம் சென்று ஈசானமடத்தில் மூலமூர்த்தியாம் நமச்சிவாய மூர்த்திகளின் திருவுருவை வணங்கிப் பின்பு திருவாவடுதுறை ஆதீன சின்னப்பட்டம் வேலப்பதேசிகரை வணங்கி நின்றனர்கள்.

அத்தேசிக மூர்த்திகள் விளையும் பயிர் முளையிலே தெரியுமென விளங்கிய முக்களாலிங்கர் தம் இயல்புகளைக் கண்டும் கேட்டும் பாராட்டிச் சமயவிசேட தீக்கைகளைச் செய்து காவியுடை அணிவித்துத் துறவு நிலையை அடைவித்தனர்.

முக்களாலிங்கர் சிவமுயன்றடையும் தெய்வக் கலை பலவற்றையும் திருந்தக் கற்று வருகையில் அவர்க்குப் போதகாசிரியராயும் விளங்கிய வேலப்பதேசிகர் நிருவாண தீக்கையும் தந்து ‘சிவஞானம்’ எனத் தீட்சாநாமம் சூட்டினர்.

வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கற்றுவல்லராய நம் சிவஞான சுவாமிகள் இராசவல்லிபுரம் செப்பறை ‘அகிலாண்டேசுவரி பதிகம்’ அம்மை சந்நிதியில் ஆசிரியர் திருமுன்பு பாடியருளினர்.

வேலப்ப தேசிகரொடும் நம்சுவாமிகள் வழிபாடுசெய்து வருகையில் கோயமுத்தூருக்கு மூன்றுகல் தொலைவிலுள்ள மேலைச் சிதம்பரத்தில் வழிபாடுசெய்து தங்கியிருந்தபோது தேசிகர் அவர்கள் இறைவன் திருவடி நிழலை எய்தினர்.

ஆசாரியர்க்கு அங்கே அப்பொழுது செய்வன செய்து முடித்து வடிபாட்டிற்குத் தம்பிரான் ஒருவரை நியமித்துத் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தனர் சுவாமிகள்.

நமச்சிவாய மூர்த்திகளின் திருவுருவை வணங்கிய சிவஞான சுவாமிகள் ஆதீனத்தில் விளங்கிய வேலப்ப தேசிகர்க்குத் தம் ஞானாசிரியர் திருவடி கூடிய செய்தியை அறிவித்தனர்.

திருவாவடுதுறை ஆதீன வேலப்ப தேசிகர், தம்பிரான் வேலப்ப தேசிகரைச் சின்னப் பட்டத்திற்குக் கொணர்ந்து சிலநாள் கழித்து அவரைச் சுசீந்திரம் திருமடத்தில் இருத்திச்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:10:00(இந்திய நேரம்)