தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

xix

அயில்கொள் முக்குடுமிப் படையார் 1040; சிவன் 1051; பிறைக்கண்ணிப் பெருந்தகை 1052; கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் 1051; தேவர்பிரான் 1054; சிவலோகன் 1056; காரேறுமெயிற்புன்கூர்க் கண்ணுதலார் 1057; சிவலோகமுடையவர் 1058; வடங்கொண்ட பொன்னிதழி மணிமுடியார் 1059; lதம்பெருமான் 649, 873, 937, 1023, 1069, 1126, 1140, 1254, 1059; ஈசர் 1060; எம்பெருமான் 1000, 1061, 1069; மைவண்ணத்திருமிடற்றார் 1066; அம்பலத்துளாடுவார் 1066; மெய்ப்பொருளானார் 1068; அம்பலவர் 1069, 1070, 1077; பிஞ்ஞகர் 809, 1071; இறையவர் 1071; நடமாடுங்கழல் 1072; அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்றகழல் 1074, கொல்லைமான் மறிக்கரத்தார் 1075; உலகுய்ய நடமாடும் எல்லை 1075; சுந்தரத் தாமரை புரையுந் திருவடிகள்; அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் 1076; தனியாயின தலைவர் 1078; கறை விளங்கிய கண்டர் 1082; செங்கண்மால் விடையார் - ஆறுசூழ்சடையண்ணலார் 1090; உம்பர் நாயகர் 1091; நீறுசேர்திருமேனியர் 1096; தெள்ளுவார்புனல் வேணியார் 1127; எண்ணிலாகம மியம்பிய இறைவர் 1128; நாயகன் 1129; தேவ தேவன் 1130; ஏதமில்பல யோனி யெண்பத்துநான்கு நூறாயிரந்தனுள் வைத்த பேதமும் புரந்தருளுமக் கருணைப்பிரான் 1131; திங்கடங்கிய புரிசடையார் 1133; அவர் தனிப்பெருங்கணவர் 1134; பெருந்தவப் பயனாங் கம்ப மேவிய தம்பெருமான் 1135; உம்பர் நாயகர் 1136; கம்பமேவிய வும்பர் நாயகர் 1138; நாதர் 1139; அண்ணலார் 1140; தண்ணிலாமலர் வேணியினார் 1140; மாவின்மேவியதேவநாயகர் 1141; கம்பர் 1142, 1164; ஏகம்பர் 1142; ஆதிதேவனார் 1143; வேதகாரணராயவேகம்பர் 1144; அண்டர் நாயகர் 1145; விடையின் மேலவர் 1147; சென்னியிற்பிறையணிந்தவர் 1152; இறைவர் 1153; உமைபாகர் 1165; அளவில்சுடர்ப் பிழம்பானார் 1168; வன்புலியினுரியாடைத் திருவேகம்பர் 1169; நிறைதவஞ்செயிமயப் பாவை நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் 1170; வானவர் நாயகர் திருவேகம்பர் 1176; கயிலைமலையார் 1178; மழவிளவெண்டிங்கள்புனை கம்பர் 1179; அண்ணலார் 1185, 1189; புரங்கடந்தவர் 1186; மைவிரவுகண்டர் 1187; நீரொலிக்க வராவிரைக்க நிலாமுகிழ்க்குந் திருமுடியார் 1190; தேசுடைய மலர்க்கமலச் சேவடியார் 1191; பொன்னிமயப் பொருப்பரையன் பயந்தருளும் பூங்கொடித, னன்னிலைமை யன்றளக்க வெழுந்தருளு நம் பெருமான் 1192; மாலறியா மலரடிகள் 1193; மறிக்கரத்தார் 1198; காவாலி 1199; அணி வளைத்தழும்பர் 1202; தேனிறைந்த மலரிதழித் திருமுடியார் 1203; முக்கண்ணர் 1204; ஆடுங்கழல் 1220; நடமே புரியும் சேவடியார் 1221; மன்றுணடம்புரியும் நாயனார் 1225; முதற் காரணராகு நீலகண்டர் - செய்ய சடைநிருத்தர் 1226; உழைமான் மறிக்கன்று துள்ளுங்கரத்தார் - சுரநதிநீர் தெள்ளும் சடையார் 1227, மன்றுளாடும் சேவடிகள் 1228; சிவனார் 1236; செங்கண் விடையார் 1237; 1265; புனிதர் 1238; அண்டர் பெருமான் 1240; ஆளவுடையார் 1241; உம்பர்பிரான் 1242; இறையோன் 1243; அரனார் 555, 1253, 1264; உடையநாதன் - 1252; அரவமேவுஞ்சடை முடியார் 1253; செறிந்த சடைநீள் முடியார் 1257; விமலமூர்த்தி 1258; தொடுத்த விதழி சூழ்சடையார் 1259; சிவமயம் 1260; அண்டர்பிரான் 1261; மூலமுதல்வர்; 1263; ஈறிலாதார் 1264; நீலநிறைந்த மணிகண்டத்தீசன் 1265.

சிவலோக முடையவர் - 1056, 1058. சிவலோகன். திருப்புன்கூர்ச் சுவாமி பெயர்.

சூர் அரமகளிர் - 688. மலையில் வாழும் ஒருவகைத் தேவசாதி மகளிர்.

செவ்வழியாழ் - 1115. நெய்தனிலத்துக்குரிய யாழ்வகை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 14:46:58(இந்திய நேரம்)