தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்


தருமை ஆதீனம் ...
 
1409

தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

1. தேவாரப் பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது.

2. வேத சிவாகம பாடசாலை வைத்துத் திருக்கோயில் பூசை
முறைகளைப் பயிற்றுவிப்பது.

3. திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், சைவ சமய நூல்கள் பலவற்றைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது.

4. தேவாரத் தலங்கள் தோறும் வழிபாடுகள் நிகழ்த்தி அவ்வத்தலத்
தேவாரத்தைப் புராண வரலாறுகளுடன் அச்சிட்டு வழங்குவது.

5. ஆலயங்கள் பலவற்றிலும் நிகழும் பெருவிழாக்களில் சமய
விரிவுரைகள், மாநாடுகள் நிகழ்த்திச் சமய தத்துவங்களை மக்கட்கு
உணர்த்துவது.

6. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி அமைத்து
மாணவர்களுக்குக் கல்வி நலம் தருவது.

7. அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி மையம் நிறுவி அதன்
வாயிலாகக் கடல் கடந்த நாடுகளிலும் நம் நாட்டிலும் வாழும் சமயம் சார்ந்த
மக்கட்குச் சைவசமயப் பெருமைகளை அறிவுறுத்துவதோடு சென்னை, திருச்சி,
நெல்லை ஆகிய இடங்களில் மாலை நேரக் கல்லூரி நடத்தி வருவது.

8. உயர்நிலைப் பள்ளிகள் கலைக்கல்லூரிகளில் பயிலும் மக்கட்குச்
சமய உண்மைகளை உணர்த்தி வருவது.

9. ஞானசம்பந்தம் என்னும் மாத இதழ் நடத்தி அதன் வாயிலாக
மக்கட்குச் சமய உண்மைகளை உணர்த்தி வருவது.

10. ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள 27 திருக்கோயில்களையும்
தூய்மையாகப் பரிபாலித்து நாள்வழிபாடு சிறப்புவழிபாடுகள் நிகழ்த்திவருவது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-01-2019 16:11:10(இந்திய நேரம்)