தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thevaram


1410
 
தருமை ஆதீனம் ...

11. ஆதீனக் கோயில்கள் பலவற்றில் நூலகங்கள் அமைத்தும் மாலை
நேரத்தில் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு குழந்தைகட்குத் திருமுறை
வகுப்புக்கள் நடத்தியும் உதவுவது.

12. சமய நூல்களை ஆய்வு நோக்கோடு எழுதி வெளியிட
முன்வருவோர்க்கு உதவுவது.

13. ஆதீனத்திருக்கோயில்களில் பழுதடைந்த கட்டிடப் பகுதிகளை
இடித்துப் புதுப்பித்தும் 12 ஆண்டுகட்கு ஒருமுறை மூர்த்திகட்கு
அஷ்டபந்தனம் சாத்தியும் திருக்குட நீராட்டு விழா நடத்துவது.

14. ஆதீனத் திருமடத்தில் பெரியதொரு நூலகம் அமைத்துப்
பழைமையான ஓலைச்சுவடிகளையும் நூல்களையும் பேணி வருவது.

15. கல்வி பயிலும் ஏழை மாணவர்கட்குக் கல்விக் கட்டணம்
புத்தகங்கள் வழங்கி உதவுவது.

16. மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்து
நகராட்சிக்கு உதவியதுபோலச் சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை
சென்னை அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட் போன்ற பொது
நிறுவனங்களுக்கும் பெருந்தொகை உதவி வருவது.

17. ஆதீனக் குரு முதல்வர் குரு பூசைவிழாவில் சமய வகுப்புகள்
கருத்தரங்குகள் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடு முதலியன நடத்திவருவது.

18. அவ்வப்போது மக்கட்கு எல்லாச் சமய தத்துவங்களையும்
மாநாடுகள் மூலம் உணர்த்திப் பொதுவாக அனைத்துச் சமய
தத்துவங்களையும் மக்கள் அறியும்படி செய்வது.

19. தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் சமயப் பிரசார
நிலையம் அமைத்துச் சமய வகுப்புக்கள் நடத்தியும்,
ஆதீனத்திருக்கோயில்களில் நிகழும் சிறப்பு விழாக்களின் பிரசாதங்களை
அங்குள்ள மக்கட்கு வழங்கியும் வருவது.

20. திங்கள் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீலஸ்ரீ
குருமகாசந்திதானம் பொதுமக்கட்கு அருளாசி வழங்குவது.

21. திருவாமூரில் அப்பருக்குத் திருக்கோயில் எடுப்பித்துத்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-10-2019 16:09:39(இந்திய நேரம்)