தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

வகுத்தது அறிவு நெறியே. அதுவே உயர்ந்த ஞானிகளாலே ஞானநெறி -
ஒளிநெறி - நன்னெறி - குருநெறி - சிவநெறியெனப் பலவகையாலும்
பேசப்பெறும். இதனை அடையும் வழி காட்ட வேதங்களை இறைவர், தாமே
அருளினர்; தன்னிற் பிறிதில்லாது தானேயாகிய பெருமக்கள் வாக்கினின்றும்
அருளினர்; இவற்றை அறியும் அறிவையும் மக்களுக்கு அருளினர்.
அறிவினாலே மறையாதி சாத்திர ஞானங்களை உணர்ந்தும்,
அவ்வழிநின்றோரைப் பின்பற்றியும், அவை காட்டும் சமயவழி நின்றும்,
உலகர் உய்யுமாறு செய்தலே இறைவன் அருட்செயல், "நல்லறிவையும் வகுத்து
மறையாதி நூலையும் வகுத்துச் சைவ முதலாம்அளவில் சமயமும் வகுத்துமேற்
சமயங் கடந்த மோன சமரசம் வகுத்த நீ" என்றார் தாயுமானார். இவ்வாறு
அருளப்பட்ட நூல்களிலே பெரிய புராணம் தலைசிறந்து விளங்குவதாம்.
அஃது இறைவன் தானே அருளியதும், ஆசிரியர் சேக்கிழார் வாக்கினின்று
அருளியதுமாகிய அருள்வாக்காம். இஃதுண்மை ஞானநூல், ஞானிகளைப்
பற்றிய நூல். தமிழ்ச்சுவை வேண்டுவோர்க்குப் பேரிலக்கியமும்
பெருங்காவியமுமாம். கதை வேண்டுவோர்க்குக் கதையுமாம். உலகநூல்
பயில்வோர்க்கஃதேயாம். வேறு பல சொல்லுவதென்? யார் யார் எதனை
வேண்டுமானாலும் இதன்பாற் பெறலாம். "வேண்டுவார் வேண்டுவதே
ஈவான்கண்டாய்" என்ற இறைவனிலக்கணமே அவனருள் வாக்காகிய
இதனிலக்கணமுமாம்.

உலகப் பொருளும் உறுதிப் பொருளும் ஒருங்கே பெறும் அரும்
பெரும் பண்டாரமாகிய இதனைத் தமிழ் மக்களும் சைவ மக்களும பயின்று
பயின்று உணர்ந்துணர்ந்து பயன்பெற்று உய்யவேண்டு மென்பதே எனது
பேராசையாகும். இவ்வெளியீடு அதற்கு ஒரு சிறிதேனும் உதவுமானால் நான்
பெரும்பேறு பெற்றவனாக எண்ணி மகிழ்வேன். ஆணவ உருவமாகிய புதிய
ஆராய்ச்சி முறையிற் றலைப்பட்டு இவ்வருள் நூலுள்ளும் புகுந்து வினைதேடி
யுழன்று கெடுவோரும் கெடுப்போரும் பலர் இப்புராணத்தினுள்ளே
இடைச்செருகலாக 33 பாட்டுக்கள் பிற்காலத்திலே புகுத்தப்பட்டன என்பது
பலர் துணிபு. இவைபற்றிய அடியேனது சில கருத்துக்களை எனது ‘சேக்கிழார்'
என்னும் நூலில் 206 - 224 பக்கங்களிற் குறித்துள்ளேன்.
அவ்வாராய்ச்சியினுள் நான் மிகவும் அஞ்சியே உட்புகுந்தேன். உமாபதி
சிவாசாரியார் காட்டிய பாடற்றொகையின்மேற் பல பாட்டுக்கள்
காணப்பட்டமையும், சிற்சில இடங்கள் சேக்கிழார் பெருமானுக்கே உரிய
முத்திரையின் அமைவில்லாத பாடல்கள் காணப்பட்டமையுமே நான்
அக்கருத்துக்களை மிக அச்சத்துடன் வெளியிட நேர்ந்தது. இவ்வாறன்றிப்
பற்பல நவீனக்கிளர்ச்சிகளிற் பட்டுத், தத்தம் புதிய கருத்துக்களுக்கிசையாதன
என்று கொண்டு, இப்புராணத்தின் பல பகுதிகளைச் சேக்கிழார் வாக்கல்ல
என்று தத்தம் மனம்போனவாறு ஒதுக்குவாருமுளர். திருமலைச் சிறப்பில்
திருக்கைலாயத்தில் ஆலாலசுந்தரர் அனிந்திதை கமலினியார் நிகழ்ச்சி,
திருநாளைப்போவார் தில்லையில் அந்தணர்கள் முன் தீமூழ்கி முனியாகிய
நிகழ்ச்சி, சமணர் கழுவேறிய நிகழ்ச்சி முதலிய பகுதிகளைத் தத்தம் நவீன
ஆணவ ஆராய்ச்சியிற் பட்டு ஒதுக்குவாரையும் சைவவுலகம் இற்றைநாட்
காண்கின்றது. என்னே விதியின் கதி; இவ்வாறு அவ்வவர் மனத்துக்
கேலாதனவற்றைத் தள்ளிக்கொண்டே போனால் புராணத்தில் ஒன்றுமெஞ்சா
தென்பது ஒருதலை. ஆராய்வார் ஒவ்வோர் நிலையினின்றமைந்து
முறைப்பட்டொழுகலே சால்புடைத்தன்றி மனம்போன போக்கெல்லாம் போய்
வீழ்தல் ஆராய்ச்சியாகாது. இத்தகைய ஆராய்ச்சிகளால் உண்மை
காணவியலாது அபசாரமே விளையும். இவற்றைக் காண்பதும் கேட்பதும்
சிவநிந்தையாகிய பெரும் பாவம் பயக்கும் என்பது நூற்றுணிபு.

பதிபுண்ணிய பெருமக்களாகிய உண்மை நாயன்மார்களது உண்மைச்
சரிதமாகிய இந்த ஞானநூலுக்கும், ஒன்றுக்கும் பற்றாத புழுத்த நாயினுங்னாகிய


புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:06:55(இந்திய நேரம்)