தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாயன்மார் திருநட்சத்திரக்கோவை

திருச்சிற்றம்பலம்

அறுபான்மும்மை நாயன்மார்
திருநட்சத்திரங்கள்


ஒன்றகல வெட்டெட்டா மோதுமடி யாரான்பாற்
றுன்றுமதி நாளினிது சொல்லவே - வென்றிதரும்
பொன்னிதிலி நாயகனார் பூமுடிமே லாடுதிருச்
சன்னிதிவி நாயனார் தாள்.
நிலைமண்டிலவாசிரியப்பா
தில்லைவா ழந்தணர் திருவரு ளாலவர்
மல்குசீர்ப் பதத்தை மகிழ்வொடு வணங்கிக்
கடிதிரு நீல கண்டர்தை விசாகம்
வடிவியற் பகையார் மார்கழி யுத்திரம்
 
5
வருமிளை யான்குடி மாறரா வணிமகங்
கருதுமெய்ப் பொருளார் கார்த்திகை யுத்திரம்
விறன்மிண்ட கண்டர் மேடமா திரைநா
ளறனமர் நீதி யானிப் பூரம்
மாணெறி பத்தர் மாசியி லத்தங்
 
10
காணுமே னாதியார் கன்னியுத் திராட
மலர்கண் ணப்பர் மகாமான் றலையிற்
குலுவுகுங் குலியர் கோளரி மூலந்
தருமா னக்கஞ் சாறர்விற் சுவாதி
யரிவாட் டாயர்தை யாதிரை நாளி
 
15
லானாயர் கார்த்திகை யத்த நாளிற்
கான மூர்த்தியார் கடகத் தாரன்
முருகரிடப மூல மதனி
லுருத்திர பசுபதி யுயர்கன்னி முன்னாள்
பொருந்திரு நாளைப் போவார்கன் னியிற்பார்
 
20
திருக்குறிப் படியார் சித்திரைச் சுவாதி
சண்டீச ராமவர் தையுத்தி ரத்திற்
றண்டமி ழப்பர் தகரிற் சதயங்
குலச்சிறை நாயனார் கோளரி யனுட
மலகில் குறும்ப ராடியிற் சித்திரை
 
25
யருள்கா ரைக்கா லம்மைமீன் விளக்கா
மருகிலப் பூதிதை யதிற்சத யத்திற்
கமைநீல நக்கர் காளை மூலத்தி
னமிநந்தி யடிக ணாள்விடைப் பூச
ஞான சம்பந்தர் நாள்விடை மூல
 
30
மான கலிக்காம ரானி ரேவதியி

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:25:03(இந்திய நேரம்)