தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

மங்கை நாகைக்கா ரோண முன்றிருச்சிக் கற்றிருக்கீழ் வேளூர்தே வூரே,
யரிக்கரியான் பள்ளிமுக்கூட றிருவாரூ ரரனெறிமூ லட்டானம் பரவையுண்மண்
டளியே.

மேலாகும் விளமர்கர வீரம்பெரு வேளூர் மிளிர்தலையா லங்காடு
குடவாயில் சேறை, நாலூர்ம யானங்நடு வாய்க்கரைப் புத்தூர் நவிலுமிரும்
பூளைதிரு வரதைப் பெரும் பாழி, மாலூரு மவளிவணல் லூர்பரிதி நியமம்
வாழ்வெண்ணி பூவனூர் பாதாளீச் சரநீர்ச், சேலூருந் திருக்களர்சிற்
றேமமுசாத் தானந் திருவிடும்பா வனத்தோடு சேர்ந்தகடிக் குளமே, 8

தண்டலைநீ ணெறிகோட்டூர் வெண்டுறையோ டழகே தருகொள்ளம்
பூதூர் பே ரெயில்கொள்ளிக் காடு காண்டருதெங் கூர்நெல்லிக்கா
நாட்டியத்தான் குடியே காறாயில் கன்றாப்பூர் வலி வலங்கைச் சினத்தோ,
டண்டர்பிரான் கோளிலிதென்றிருவாய்மூர் மறைக்கா டகத்தியான்
பள்ளிகோடிக் குழகருந்தென் கரையி, லெண்டருநூற் றிருபத்தே; ழிப்பா
லீழத்தி லிசைகோண மாமலைகே தீச்சரமென் றிரண்டே; 9

ஆலவா யாப்பனூர் பரங்குன்றே டகத்தோ டருங்கொடுங்குன்
றந்திருப்புத் தூர்புனவா யிலினோ, டேலுமிரா மேச்சர மாடானைகா னப்பே
ரெழிற்றிருப்பூ வணஞ்சுழிய லின்புறுகுற் றாலம், பாலலோ சனன்றிருநெல்
வேலியொடு பாண்டி பதினான்கு; மலைநாட்டி லஞ்சைக்கள மொன்றே;
சீலமிகு மவிநாசி திருமுருகன் பூண்டி திருநணா கொடி மாடச் செங்குன்றூர்
தானே, 10

வெஞ்சமாக் கூடல்கொடு முடிகருவூர் கொங்கின் மேவுமே;
ழாத்துறைவன் டூங்கானை மாட, மெஞ்சலில்கூ டலையாற்றூ ரெருக்கத்தம்
புலியூரிணையகலுந் தினைநகர் சோ புரமதிகை புகழே, விஞ்சுதிரு நாவலூர்
முதுகுன்றந் திருநெல்வெண்ணெய் திருக் கோவலூ ரறையணிநல் லூரே,
மஞ்சுதிக ழிடையாறு வெண்ணெய் நல்லூர் துறையூர் வடுகூர்வீ டேயருளுந்
திருமாணி குழியே, 11

தண்ணார்தண் டலைப்பாதிரிப்புலியூர் முண்டீச் சரம்புறவார்
பனங்காட்டூர் திருவாமாத் தூரே, யெண்ணாரண் ணாமலையு நடுநாட்டி
லிருபத் திரண்டாகு; மிப்பாலே கம்பமேற் றளிவிண், கண்ணோங்கு
மதிலோண காந்தன்றளி யனேக தங்காவ தங்கச்சி நெறிக்காரைக் காடே,
யுண்ணாடு குரங்கணின்முட் டந்திருமா கறலோத் தூர்வன்பார்த்தான்
பனங்காட் டூர்வல்லமாற் பேறே, 12

ஊறலிலம் பையங்கோட்டூர் விற்கோலமா லங்கா டுயர்பாசூர்
வெண்பாக்கங்கள்ளில்கா ளத்தி, மாறிறிரு வொற்றியூர் வலிதாயம் பாலி
வடமுல்லை வாயில் வேற் காடுதிரு மயிலை, யீறிறிரு வான்மியூர்கச் சூராலக்
கோயி லிடைச்சுரங் கழுக்குன்ற மச்சிறுபாக் கம்மே, மாறிறிரு வக்கரையே
யரசிலிதொல் லிரும்பை மாகாளந் தொண்டைநன் னாட் டெண்ணின்முப்பா
னிரண்டே; 13

கோகரணந் துளுவதே யத்திலொன்றே; யிப்பாற் குலவுபருப் பதநீல
பருப்பதமம் பிகைதன், பாகருறை யனேகதங்கா வதந்திருக்கே தாரம்
பகர்நொடித்தான் மாலைவடக்கிற் பதியைந்தே; யிவற்றோ, டாகவிரு
நூற்றெழுபா னான்கென்பர் மூவ ரருட்பதிக மிருக்குமூ; ரதிகமாம் வைப்புத்;
தாகமுட னினைப்போர்க்குந் துதிப்போர்க்கும் வினைகள் சாராவாம்;
பிறப்பகலுஞ்; சத்தியமுத் தியுமே. 14

திருப்பதிக் கோவை முற்றிற்று

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 13:18:58(இந்திய நேரம்)