தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

திருப்பதிக்கோவை

திருச்சிற்றம்பலம்


உமாபதி சிவாசாரியார் அருளிச் செய்த
திருப்பதிகக் கோவை

ஒன்றாதி யோரெழுபத் தொன்றீறாய் மூவர்தமிழ்
சென்றார் சிவதலங்கள் செப்புதற்கு - நின்று
கடக்குஞ் சரமுகனேர் காய்விழியா னீன்ற
கடக்குஞ் சரமுகனே காப்பு.

பன்னுசிவ தலமொருநூற் றைம்பதிற்று மூன்று பதிக மொன்று;
நாற்பத்தொன்பதுபதிக மிரண்டர; முன்னுமிரு பதிற்றெட்டு நகர்பதிக மூன்றா;
மொருபதினோர் தலம்பதிக மொருநான்கென் றுணர்க; மன்னுமிரு நான்குதல
மோரைந்தே பதிக; மற்றுமைந்து தலங்களுக்கு வருபதிக மாறாம்;
பின்னுமைந்து வளநகர்க்குப் பெறும் பதிக மேழாம்; பேசுமொரு நான்குதலம்
பெறும்பதிக மெட்டே. 1

பரவுமொரு நான்குதலம் பதினொன்றாம் பதிகம்; பன்னுமிரு
தலம்பதிகம் பன்னிரண்டாப் பகரு; முரைசெயிரு தலம்பதிகம் பதினெட்டா
மிப்பா; லொரு மூன்று தலங்களுக்கிங் குறுபதிக முரைக்கி, னிரவிவரு
மறுநான்கு - முப்பத்திற்று நான்கு - நீடெழு பத்தொன்றுமென நிரனிரையா
மாகக் கருதுசிவ தலமிருநூற் றெழுபதிற்று நான்கு கடைகாப்போ ரெழுநூற்று
நாற்பதிற்றொன் பானே. 2

திருப்பழுவூர் சேய்ஞலூர் திருமுல்லைவாயி றிருவைகா கொடிமாடச்
செங்குன்றூர் வியலூர், கருக்குடிதெங் கூர்பனந்தாள் கலிக்காமூர் தலைச்சங்
காடு மயேந் திரப்பள்ளி கைச்சினங்கன் றாப்பூர், குரக்குக்கா பெரும்புலியூர்
திருக்காட்டுப் பள்ளி குடந்தைக் கீழ்க் கோட்டமொடு குடந்தைக்கா ரோண,
மெருக்கத்தம் புலியூர்வெண் டுறைகண்ணார் கோயி லிலம்பையங்கோட்
டூர்சிக்க லிராமனதீச்சரமே, 3

பள்ளியின்முக் கூடறிரு விரும்பூளை யாவூர்ப் பசுபதீச் சரம்பாலைத்
துறை பருதி நியமங், கள்ளில்குரங் கணின்முட்டந் திருமுருகன் பூண்டி
கஞ்சனூர் கச்சி நெறிக் காரைக்கா டோத்தூர், புள்ளமங்கை நாட்டியத்தான்
குடிகலைய நல்லூர் புக்கொளியூ ரவிநாசி பூவனூர் துறையூர், கொள்ளிக்கா
டிடைச்சுரமச் சிறுபாக்கம் விளமர் கொட்டையூர் கொடுங்குன்றங் கூடலையாற்
றூரே. 4

நெல்வேலி திருவழுத்தூர் தருமபுரம் பயற்றூர் நெடுங்களம்வக்
கரையிருப்பை மாகாளம் வடுகூர், நெல்வெண்ணெய் வடகரைமாந்
துறைதிருவிற் கோலநீடூர்சக்கரப்பள்ளி யகத்தியான் பள்ளி, நெல்வாயில்
பேணுபெருந் துறைநாலூர் மயான நெல்லிக்கா விற்குடிவீ ரட்டமதி முத்தம்,
வல்லமறை யணிநல்லூர் தலையாலங்காடு வாட்போக்கி திருநாவ லூர்மயிலாப்
பூரே, 5

திருவாரூர்ப் பரவையுண்மண் டளிசாத்த மங்கை சிற்றேமந் தெளிச்சேரி
திருவு சாத் தானங், கரவீரந் திருவாலம் பொழில்வெண்ணெய் நல்லூர்
கச்சியனே கதங்காவ தங்கோடிக்குழக, ரரசிலிதென்குடித்திட்டை வடமுல்லை
வாயி லம்பர்ப் பெருந் திருக்கோயில் வெண்பாக்கஞ் சுழியல், பெருமணமிந்
திரநீல பருப்பதம் வேற் காடு பேரெயில்பாற் றுறைமூக்கிச் சரமுண்டீச் சரமே, 6

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 13:23:31(இந்திய நேரம்)