தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

பறியலூர் வீரட்டங் கானாட்டு முள்ளூர் பாதாளீச் சரமெதிர்கொள்
பாடிவலிதாயஞ், சிறுகுடிகச் சூராலக் கோயில்கொள்ளம் பூதூர் திருப்புறவார்
பனங்காட்டூர் விளநகர்தண் டலைநீ, ணெறியரதைப் பெரும்பாழி யூறல்கரு
வூரா னிலையிடும்பா வனங்கடுவாய்க் கரைப்புத்தூர் கடம்பந், துறைதிருவே
டகந்திருவஞ் சைக்களமாடானை சோபுரங்கற் குடிவடகு ரங்காடு துறையே, 7

திருமாணி குழிவேட்டக் குடிதிருவாப் பாடி திருந்துதே வன்குடிமா
கறல்சத்தி முற்றந், திருவாப்ப னூர்மீயச் சூரவ்வூர் தன்னிற் றிகழ்ந்ததிரு
விளங்கோயில் வெஞ்சமாக் கூடல், பெருநீலக் குடிமண்ணிப் படிக்கரைநன்
னிலத்துப் பெருங்கோயி றிருநணா திருப்பட்டீச் சரமே, திருவீங்கோய்
மலைவன்பார்த் தான் பனங்காட் டூரே திருப்புகலூர் வர்த்தமா னேச்சரம்பாம்
புரமே. 8

கடைமுடியே யோணகாந் தன்றளிகோட் டூர்வை கன்மாடக்
கோயிலிடையாறு பழை யாறை, வடதளிநற் றினைககரங் கோணமா மலைசீர்
வன்னியூர் கருவிலிய னேக தங்கா வதநல், லிடமேவு கடிக்குளநற்
றிருக்களரென் றிவைகட் கிரும்பதிக மொவ்வொன்றென் றிசைத்திடுக;
விப்பாற், குடவாயில் புனவாயி றூங்கானை மாடங் கோழம்ப மவளிவணல்
லூர்கோலக் காவே, 9

குருகாவூர் திருவேள்விக்குடிவிசய மங்கை குற்றாலங்
குடமூக்குக்கோட்டாறு பனையூர், கருநாவூர் குரங்காடு துறையோமாம்
புலியூர் கண்டியூர் வேதிகுடி காணூர் கோ கரணந், திருவாரூ ரானெறிபந்
தணைநல்லூர் நல்லந் திருக்கண்டீச் சரந்தேவூர் திருச்சிராப் பள்ளி,
பெருவேளூர் கீழ்வேளூ ரெறும்பியூர் கானப் பேர்திருமங் கலக் குடியாக்
கூர்கோவ லூரே, 10

திருப்பரங்குன் றந்திருப்பா திரிப்புலியூர் குறுக்கை திருப்புத்தூர்
மணஞ்சேரி பாச்சிலாச் சிராமங், கருப்பறிய லூர்கேதீச் சரந்திருக்கே தாரங்
கச்சிமேற் றளி மேலைத் திருக்காட்டுப் பள்ளி, யருத்தியுறு பட்டினத்துப்
பல்லவனீச் சரம்பே ரன்பிலா லந்துறைப ராய்த்துறைவேட் களமிங், குரைத்தசீ
ரன்னியூரிவ்விரண்டாம் பதிகமுள்ள தலங்; கடவூர்ம யானம்வாஞ் சியமே. 11

துருத்திதிரு நனிபள்ளி திருமருக றிருப்பூந் துருத்திபுறம் பயங்கடவூர்
புள்ளிருக்கு வேளூ ரரத்துறைவாழ் கொளிபுத்தூர் வான்மியூர் பாசூ ரம்பர்மா
காள மயிலாடுதுறை வாய்மூர், திருக்கழுக்குன் றம்பாண்டிக் கொடுமுடிரா
மேச்சரஞ் செங்காட்டங் குடிவெண்ணி திருச்செம்பொன் பள்ளி, பருப்பதம்புன்
கூரரிசிற் கரைப்புத்தூர் சேறை பைஞ்ஞீலி கற்குடிமா மலைபதிக மூன்றே; 12

வலம்புரமா லங்காடு சிவபுரங்கா ளத்தி வலிவலஞ்சாய்க்காடுதிருக்
கோடிகாநகரம், நலந்திகழும்பூ வணங்கோளிலி நின்றியூருநறையூர்ச்சித்
தீச்சரமுநான்காகும் பதிகம்; வலஞ்சுழி நல்லூர்பழன மாமாத்தூரண்ணாமலை
கடம்பூரின்னம்பர் நாரையூரைந்தா; நிலந்திகழ்நாகேச்சரமாற்பேறுமழபாடி
நெய்த்தானம்வெண் காடுநீள்பதிக மாறே;

கயிலாய மானைக்கா நள்ளாறு நாகைக் காரோணந் திருச்சோற்றுத்
துறையேழு; புகலூர், வயலாருங் கழிப்பாலை யொற்றியூர் திருவா
வடுதுறையெட்டாந்; தில்லை மறைக்காடு மதுரை, யியலாரு முதுகுன்றம்
பதினொன்று; கச்சி யேகம்ப மிடைமருதீரா; றையா றதிகை, யயலீரொன்பான்;
வீழி - யாரூர்சீகாழி யறுநான்கு - முப்பானான் - கெழுபத்தொன் றாமே. 14

திருப்பதிகக்கோவை முற்றிற்று

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 13:24:43(இந்திய நேரம்)