தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

பின்புசில நாளின்க ணாரூர் நம்பி பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர்ப்
பித்தர் வென்னு, மின்பமுதற் றிருப்பதிக மூழி தோறு மீறாய்முப் பத்தெண்ணா
யிரமதாக முன்புபுகன் றவர் நொடித்தான் மலையிற் சேர்ந்தார்;
முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னி, லன்றவர்கை யிலச்சினையால்
வைத்தார்; மன்ன! வாராய்ந்து தருக“வென வருளிச் செய்தார். 16

“அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடுமதுபோலன்; றிதுவென்று
முளதா முண்மைப், பரபதமுந் தற்பரமும் பரனே யன்றிப் பலரில்லை
யென்றெழுதும் பனுவல்; பாரி, னெரியினிடை வேவா;தாற் றெதிரே யோடு;
மென்புக்கு முயிர்கொடுக்கு; மிடுநஞ் சாற்றுங்; கரியைவளை விக்குங்; கண்
மிதக்கப் பண்ணுங்; கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே.“ 17

என்றென்று நம்பிக்குப் பரிவா லுண்மை யின்றமிழின் பெருமைதனை
யியம்பக் கேட்டுக், குன்றொன்று பேருருவங் கொண்டாற் போலுங்
குஞ்சரத்தோ னருளினையுட் கொண்டு மன்னன், மன்றினிடஞ் சென்று, மறை
யோர்க டொண்டர் வார்சடையோர் காவலுடை மரபோர்க் கெல்லா,
நன்றெங்கள் கணபதிதன் சொல்லி தென்று நன்மையுடன் மன்னவனார்
நவிலுங் காலை, 18

அத்தகையோர் “தமிழ்வைத்த மூவர்வந்தா லறைதிறங்கு“ மெனவுரைக்க,
வரசன் றானு, மெய்த்தகுசீ ரம்பலவாக் குற்ற செல்வ விழாவெடுத்து விளம்பு
தமிழ் மூவர் தம்மை, யுய்த்தணிவீ தியினிலுலா வருவித் தும்பர் நாயகன்றன்
கோயில்வல மாக்கி, யுள்ளே, சித்தமெலா முருக்குதமி ழிருக்கைசேரச்
சேர்த்தி, “யவர் சேர்ந்த“ தெனச் செப்பி நின்றான். 19

ஐயர்நட மாடுமம் பலத்தின் மேல்பா லருள்பெற்ற மூவர்தம தருள்சேர்
செய்ய, கையதுவே யிலச்சினையா யிருந்த காப்பைக் கண்டவர்க ளதிசயிப்பர்
கடைவாய் நீக்கிப், பொய்யுடையோ ரறிவுதனைப் புலன்கண் மூடும் பொற்பது
போற் போதருகும் பாடன்றனை, நொய்யசிறு வன்மீக மூடக் கண்டு நொடிப்
பளவி னிற்சிந்தை நொந்த வேந்தன். 20

பார்த்ததனைப் புறத்துய்ப்ப வுரைத்து, மேலே படிந்திருந்த
மண்மலையைச் சேரத் தள்ளிச், சீர்த்ததில தயிலமலி கும்பங் கொண்டு
செல்லுநனை யச்சொரிந்து திருவே டெல்லா, மார்த்தவரு ளதனாலே யெடுத்து
நோக்க வலகிலா வேடுபழுதாகக் கொண்டு, “தீர்த்தமுடிக் கணிபரனே!
பரனே!“ யென்னச் சிந்தைதளர்ந் திருகணீர் சோர நின்றான். 21

ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே யிடர்க்கடலின் கரைகாணா
தினையுங் காலைச், சார்ந்தமலை மகள்கொழுந னருளால் “வேதச் சைவநெறித்
தலைவரெனு மூவர் பாடல், வேய்ந்தனபோன் மண்மூடச் செய்தேயீண்டு
வேண்டுவன வைத்தோ“ மென்றுலகி லுள்ள, மாந்தரொடு மன்னவனுங்
கேட்கு மாற்றால் வானகத்தி லோரோசை யெழுந்த தன்றே. 22

அந்தமொழி கேட்டலுமே, மன்னன்றானு மாடினான்; பாடினா;
னலக்கண் யாவுஞ், சிந்தினா; னமுதமுண்டான் போல நெஞ்சந் தேறினா;
னம்பிதிரு வடியிற் றாழ்ந்தான்; பந்தமறு சிவனடியார் கொள்க வென்னாப்
பண்டாரந் திறந்து விட்டான்; பரிவு கூர்ந்தான்; இந்தவகைப்
பெருங்களிகொண் மன்னன் றானு மெழின்முறையை முன்போல வகுக்க
வெண்ணி, 23

மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர் வகுத்தருளா லமைத்ததிரு
முறையோர் மூன்று, மன்னவகை வாகீசர் முறையோர் மூன்று, மாரூர
ருரைத்ததிரு முறையே தொன்றுந், துன்னுவகை யேழாகத் தொகுத்துச்
செய்தான் தூயமனு

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 13:34:03(இந்திய நேரம்)