Primary tabs
வெழுகோடி யென்ப துன்னித்,
தன்னிகரி றிருவருளான் மன்னன்றானுந்
தாரணியோர் வீடுபெறுந் தன்மை சூழ்ந்தே. 24
றெண்பத்தி னான்கினா லிலங்குதிரு முறைமூன்று
நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்
வண்பெற்ற முறை; யொன்று நூற்றினால் வன்றொண்டர்;
மோகமெறி திருவிசைப்பா மாலைமுறை யொன்று; சிவ
போகமிகு மந்திரமா முறையொன்று; புகழ்பெறவே
பாகமிகுந் திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்.
சித்திதரு மிறைமொழிந்த திருமுகப்பா சுரமுதலா
வுய்த்தபதி கங்களையு மொருமுறையாச் செய்கவெனப்
பத்திதருந் திருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்.
ரிந்தவகை திருமுறைக ளேழாக வெடுத்தமைத்துப்,
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்று மாதலினா
லந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார்.
நோக்கியபின் னாயன்மார் நுடங்கடைவுந், தொழிற்பேறும்
பாக்கியத்தா லிபமுகத்தோ னருள்செய்த பகுதியினால்
வாக்கியல்சே ரந்தாதி நம்பியடை வேவகுத்தார்.
சாருமவ ரொன்பானுந்; தண்டமிழா னுரைசெய்து
பேரிசையாம் வகையடைவு புவியினிடைப் பெருமையினாற்
சீருலவு திருவெருக்கத் தம்புலியூர் சென்றடைந்தார்.
மன்னுதிருக் கோயிலினை வலங்கொண்டு பணிந் தானே
யின்னிசைதந் தரு ளென்ன விரக்கமுடன் குறைந்திரப்பக்
கன்னியொரு பங்குடையோ னருள்செய்த கடனுரைப்பாம்.
வல்லியொருத் திக்கிசைகள் வாய்ப்பவளித் தோமென்று
சொல்ல, வவ டனையழைத்துச் சுருதி வழிப் பண்டழுவு
நல்லிசையின் வழிகேட்டு நம்பியிறை யுண்மகிழ்ந்தார்.
பாங்கினுடன் கொடுவந்து பண்ணடைவு பயில்பாட
லோங்கருளான் முறைபணித்தற் கொக்கு மென வோரோசை
தீங்கரிய வானின்க ணிகழவர சன்கேட்டான்.