தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

 

மன்னனுக்கு நம்பிக்கு மறையவர்மூ வாயிரவர்
பன்னரிய திருத்தொண்டர் பலதுறையோர்க் குங்கேட்க
வின்னருண்முன் வியந்துரைத்த விவண்முதலா விசைத்தவிசை
தென்னிலமேன் மிகத்தோன்றத் திருவருளாற் றோன்றியதாம்.
34
சொன்னட்ட பாடைக்குத் தொகையெட்டுக் கட்டளையா;
மின்னிசையாற் றருந்தக்க ராகத்தேழ் கட்டளையாம்;
பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதா;
முன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார்.
35
மேவுகுறிஞ் சிக்கஞ்சு; வியாழக்குறிஞ் சிக்காறு
பாவுபுகழ் மேகராகக் குறிஞ்சிப்பா லிரண்டு;
தேவுவந்த விந்தளத்தின் செய்திக்கு நான்; கினிய
தாவில்புகழ்க் காமரத்தின் றன்மைதனக் கிரண்டமைத்தார்.
36
காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
வாய்ந்தவகை மூன்றாக்கி, வன்னட்ட ராகத்திற்
கேய்ந்தவகை யிரண்டாக்கிச், செவ்வழியொன் றாக்கி யிசைக்
காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்.
37
கொல்லிக்கு நாலாக்கிக், கவுசிகத்துக் கூறும்வகை
சொல்லிலிரண் டாக்கி, மிகு தூங்கிசைநேர் பஞ்சமத்திற்
கொல்லையினி லொன்றாக்கிச், சாதாரிக் கொன்பதாப்,
புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார்.
38
அந்தாளிக் கொன்றாக்கி, வாகீச ரருந்தமிழின்
முந்தாய பலதமிழுக் கொன்றொன்றா மொழிவித்து,
நந்தாத நேரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்,
டுந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்.
39
தாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங்
காண்டகையார் தடுத்தாண்ட வையரரு டுய்யமுறைக்
கீண்டிசைசேரிந்தளத்துக் கிரண்டாக வெடுத்துரைத்து,
நீண்டதக்க ராகத்துக் கிரண்டாக நிகழ்வித்தார்.
40
கூறரிய நட்டரா கத்திரண்டு, கொல்லிக்கு
வேறுவகை மூன்றாக, மிகுந்தபழம் பஞ்சுரத்துக்
கேறும்வகை யிரண்டாக்கி, யின்னிசைதேர் தக்கேசிப்
பேறிசையா றாக்கி, யதிற் காந்தாரம் பிரித்திரண்டாம்.
41
ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக்; கோரிரண்டா
நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின் றுரைக்கிற்
குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங்; கூறுமிசை
யொன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற்றினார்.
42
உற்றவிசைக் குறிஞ்சிக்கோரிரண்டாக வகுத்தமைத்துப்,
பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக், கவுசிகப்பாற்
நூற்றவிசை யிரண்டாக்கித், தூயவிசைப் பஞ்சமத்துக்
கற்றவிசை யொன்றாக்கி, யரனருளால் விரித்தமைத்தார்.
43
புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 13:37:15(இந்திய நேரம்)