தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

தில்லைவா ழந்தண“ரென் றெடுத்து நாதன் செப்புமரு

ளுடையார், முத் தீயார், பத்திக்

கெல்லைகாண் பரியா, ரொப் புலகிற்றாமே

யேய்ந்துளா, ரெமையாள வாய்ந்து ளாரே.

4

திருநீலகண்ட நாயனார்

தில்லைநகர் வேட்கோவர் தூர்த்த ராகித்,

“தீண்டி லெமைத் திருநீல கண்ட“மென்று

சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்

துடியிடையாரிடையின்பந் துறந்து, மூத், தங்

கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி“ “நாங்க

ளெடுத்தில' மென் றியம்பு“மென, விழிந்து

பொய்கை மெல்லியலா ளுடன்மூழ்கி, யிளமை யெய்தி,

விளங்குபுலீச் சரத்தரனை மேவி னாரே.

5

இயற்பகை நாயனார்

எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து

ளியல்வணிக, ரியற்பகையா, ரிருவர் தேட

வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி

யாயிழையைத் தரவேண்டி யணைய, வையன்

கழலாரப் பணிந்து, மனைக் கற்பின் மேன்மைக்

காதலியைக் கொடுத், தமர்செய் கருத்தால் வந்த

பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து, மீளப்

பிஞ்ஞகனா ரழைத்தருளப், பெற்று ளாரே.

6
இளையான்குடிமாற நாயனார்

மன்னியவே ளாண்டொன்மை யிளைசை மாறர், வறுமையா லுணவுமிக மறந்து வைகி, யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி யும்பர்பிரா னணைய, வய லுழுது வித்துஞ் செந்நெல்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச், சிறுபயிரின் கறியது திருந்தச் செய்து, பன்னலரு முணவருந்தற் கெழுந்த சோதிப் பரலோக முழுதாண்ட பான்மை யாரே. 7

மெய்ப்பொருணாயனார்

சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர்,

திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை

நீதியினா; ருடன்பொருது தோற்ற மாற்றா

னெடுஞ்சினமுங் கொடும்படையு நிகழா வண்ணம்

மாதவர்போ லொருமுறைகொண் டணுகி வாளால்

வன்மைபுரிந் திட, மருண்டு வந்த தத்தன்

காதலுற, “நமர்தத்தா!“ வென்று நோக்கிக்,

கடிதகல்வித், திறைவனடி கைக்கொண் டாரே.

8

விறன்மிண்ட நாயனார்

விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை

விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்,

'வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்

வன்றொண்டன் புற; கவனை வலிய வாண்ட

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 14:36:17(இந்திய நேரம்)