Primary tabs
சொல்லுதலு, மவர்தொண்டத் தொகைமுன் பாட
உளங்குளிரவுளதென்றா; ரதனா லண்ணலுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.
பரவுசிறு முனிவடிவாய்ப் பயிலு நல்லூர்க்
குழைகாதர்வந், தொருகோ வணத்தை 1வைத்துக்,கொடுத்ததனை யெடுத்தொளித்துக் குளித்து வந்து,
தொழிலாரு மதுவேண்டி, வெகுண்டு, நீரித்துலையிலிடுங் கோவணநேர் தூக்கு மென்ன,
வெழிலாரும் பொன்மனைவி யிளஞ்சே யேற்றி,யேறினர், வா னுலகுதொழ வேறி னாரே.
எறிபத்த நாயனார்
திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ் சிவகாமி யார்மலரைச் சிந்த, யானை, யானெறியோ ரெறிபத்தர் பாக ரோடு மறவெறிய, வென்னுயிரு மகற்றீ ரென்று, புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப், புரிந்தரிவான் புக, வெழுந்த புனித வாக்காற், கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார்; தாமுங் கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே. 11
ஏனாதிநாத நாயனார்
ஈழக் குலச்சான்றா, ரெயின னூர்வா ழேனாதி நாதனா,ரிறைவ னீற்றைத் தாழத் தொழுமரபார், படைக ளாற்றுந் தன்மை 2பெறா வதிசூரன் சமரிற்றோற்று வாழத் திருநீறு சாத்தக் கண்டு மருண்டார், தெருண்டார், கை வாள்வி டார், நேர் வீழக் களிப்பார்போ னின்றே, யாக்கை விடுவித்துச், சிவனருளே மேவினாரே. 12
விளங்கியசேய், திண்ணனார், கன்னி வேட்டைக்
காடதில் வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யார்க்குத்
தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்,சீறுசிவ கோசரியுந் தெளிய, விழிப் புண்ணீ
ரோட, வொரு கண்ணப்பி, யொருகண் ணப்ப!வொழிக வெனு மருள்கொடரு குறநின் றாரே.
திகழ்மறையோர், பணிவறுமை சிதையா முன்னே
தாலியைநெற் கொளவென்று வாங்கிக் கொண்டு,சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர்,
ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரேநரபதியுந் தொழக்கச்சா னயத்து போதப்,
பாலமுத முண்டாரு மரசு மெய்திப்பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே.