தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

மானக்கஞ்சாற நாயனார்

கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க் காதன்மகள் வதுவைமணங் காண நாதன் வாக்கா வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப் “பஞ்சவடிக் கா“ மென்ன, வரிந்துநீட்டும் பத்தரெதிர் மறைந்திறைவன் பணித்த லெஞ்சலில்வண்குழல்பெற்றபேதை மாதையேயர்பிராற்குதவி, யரு ளெய்தினாரே.

அரிவாட்டாய நாயனார்

தாவில்கண மங்கலத்துள் வேளாண் டொன்மைத் தாயனார், நாயனார் தமக்கே செந்நெற், றூவரிசி யென, விளைவ தவையே யாகத், துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை, யாவினினைந் துடன்கொணர, வோர்கமரிற் சிந்த, வழிந், தரிவாள் கொண்டூட்டி யரியாமுன்னே, மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி வாள் விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே. 16

ஆனாய நாயனார்
மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்

மருவுபுக ழானாயர், வளரா மேய்ப்பார்,

கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து

குழலிசையி னைந்தெழுத்துங் குழைய வைத்துத்,

தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்,

தம்பிரா னணைந்துசெவி தாழ்த்தி வாழ்ந்து

பொங்கியவான் கருணைபுரிந் “தென்று மூதப்

போதுக“ வென் றருள, வுடன் போயி னாரே.

17
மூர்த்தி நாயனார்

வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தியாராம் வணிகர், திரு வாலவாய் மன்னர்சாத்தத் தழங்குதிர முழங்கைதாத், தேய்த்த வூறுந் தவிர்ந், தமணர் வஞ்சனையுந் தவிர, னிழந்தவுயிரினனாக, ஞால நல்க, வெழில்வேணி முடியாக, விலங்கு வேட மன்ன தவிர. முழங்குபுக ழணியாக, விரைநீ றாக மும்மையுல காண்டருளின் முன்னி னாரே. 18

முருக நாயனார்

மன்னுதிருப் புகலூர்வாழ் முருக னாரா மறையவர்கோ, வர்த்தமா னீச்ச ரத்தார் சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து 1திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக், கன்னிமதிற் கழுமலநா டுடைய நாதன் காதன்மிகு மணங்காணுங் களிப்பி னாலே யின்னல்கெட, வுடன்சேவித்தருளான்மீளா திலங்குபெருமணத் தரனையெய்தினாரே

உருத்திரபசுபதி நாயனார்
பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்

பசுபதியா ரெனுமறையோர், பணிந்து செந்தே

னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு

மகலாதே யாகளமா யமர்ந்து, நின்று,

திங்கள் வளர் சடைமுடியா னடிகள் போற்றித்,

திருவெழுத்து முருத்திர 2முந்திகழ வோதி,

மங்கையிட முடையபிரா னருளான் மேலை

வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.

20

பா - ம் - 1 திகழ்மாலை புகழ்மாலை திருந்தச் சாத்தி. 2 திருந்த.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 14:56:31(இந்திய நேரம்)