Primary tabs
நந்தனார், புறத்தொண்டர், நாளைப் போகப்
பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார், புன்கூர்ப்பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி,
வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்தவண்டழலி னிடைமூழ்கி, மறையோர் போற்ற
மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து, நாதன்விளங்குநடந் தொழமன்றுண் மேவினாரே.
குலத்தலைவர், தவர்குறிப்புக் குறித்து ளார்பால்
வந்திறைவர் நமக்கின்று தாரீ ராகின்வருந்துமுடலென, வாங்கி மாசு நீத்த
கந்தைபுல ராதொழிய, மழையு மாலைக்கடும்பொழுதும் வரக்கண்டு, கலங்கிக், கன்மேற்
சிந்தமுடி புடைப்பளவிற், றிருவே கம்பர்திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே.
விளங்கியசேய், மறைபயிலும் விசார சன்மர்,
கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது, தாமேகொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்
றாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்,தாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்
காதி, மலர்த் தாம - முயர் நாம - முண்டகல - மகனாம் பத - மருளாற் கைக்கொண்ட டாரே.
பொருவில் 1கொறுக் கையரதிபர் புகழ னார்பான்
மாற்றருமன்பினிற் றிலக வதியா மாதுவந்துதித்த பின்புமரு ணீக்கி யாருந்
தோற்றி, யமண் சமயமுறு துயர நீங்கத்துணைவாரு டரவந்த சூலை நோயாற்
பாற்றருநீ ளிடரெய்திப், பாடலிபுத் திரத்திற்பாழியொழித், தரணதிகைப் பதியில் வந்தார்.
வண்டமிழா னோய்தீர்ந்து, வாக்கின் மன்னாய்,
வெந்தபொடி - விடம் - வேழம் - வேலை - நீந்தி,வியன்சூலங், கொடியிடபம் விளங்கச் சாத்தி,
பா - ம் - 1 குறுக்கை.