Primary tabs
வளர்பொருளா லிறைவனடி வழுவா வன்பர்க்
கன்னமவர் நசையின்மிக மிசைய நல்குமன்பர்,துன்ப மவையாவு மகன்று ளாரே.
காதன்மிகு தேவியுடன் காவ லாரூ
ராடவல பெருமானைப் பணிவா, ரங்கோரகன்றமலர் தனைமோந்த வரிவை மூக்கைச்
சேடுடைய செருத்துணையா ரரியக், கேட்டுத்,திறலரசர் மலரெடுத்த செங்கை யென்றே
சூடகமுன் கைதடிந்து, ஞாலங் காத்த,தூய்மையா ரருள்சேர்ந்த வாய்மை யாரே.
குலத்தலைவ,ரிடங்கழியார், கொங்கிற் செம்பொ
னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்ந்தவாதித்தன் மரபோர், நெற் கவர்ந்தோ ரன்பர்
போநரப்ப ணிருளின்கட் காவ லாளர்புரவலர்முன் கொணர,வவர் புகலக் கேட்டு,
மானேற்றா ரடியாரே கொள்க வென்று,வழங்கி,யர சாண்டருளிண் மன்னி னாரே.
டெழிலாருந் தஞ்சைநக ருழவ, ரேத்துஞ்
செருத்துணையார், திருவாரூர் சேர்ந்து வாழ்வார்,செல்வமிகும் பல்லவர்கோன் றேவி வீழ்ந்த
மருத்துணையார் மலரெடுத்து மோப்பக் கண்டு,வளமலிபூங் கத்தியா லவண்மூக் கீர்ந்த
கருத்துணையார், விறற்றிருத்தொண் டினையே செய்துகருதலரு மமருலகங் கைக்கொண் டாரே.
புகழ்த்துணையா, ரகத்தடிமைப் புனிதர், சின்னாண்
மண்ணிகழ மழைபொழியா வற்கா லத்தால்வருந்துடல நடுங்கிடவு மணிநீ ரேந்தி,
யண்ணன்முடி பொழிகலச முடிமேல் வீழவயர்ந்தொருநாட் புலம்ப,வர னருவா லீந்த
நண்ணலரு மொருகாசுப் படியால் வாழ்ந்து,நலமலிசீ ரமருலக நண்ணி னாரே.