Primary tabs
கோட்புலியார், குவித்துயர்த்த செந்நெற் கூடு
நிலவணிவார்க் கமைத், தாணை நிறுத்தி, யொன்னார்நேர்மலைவார், திருவாணை நினையா தேநெற்
சிலமிடியா லழித்தபடி யறிந்து, வாளாற்சேர்ந்தபெருங் கிளைஞருடல் சிதற வீசி,
யிலகுமொரு குழவியையு மெறிந்து, நாதனெண்ணரிய கருணைநிழ லெய்தி னாரே.
துளங்கியவர்கள் சனைபுரித, றொகுதிநிய மங்கள்
கொண்டபணி திருவடிக்கே கொடுத்த, லீசன்குணமருவு மருங்கதையைக் குலவிக் கேட்டு
மண்டிவிழி துளும்பன், மயிர் சிலும்ப, லுன்னன்,மருவுதிருப் பணிகாட்டி வருப வாங்கி
யுண்டிகொளா தொழித, லென விவையோ ரெட்டுமுடையரவர் பத்தரென வுரைத்து ளாரே.
பரமனையேபாடுவார்
அருந்தமிழால், வடகலையா, லருளா லொன்றா லறிவுநெறி மருவுமருங் 1கவிகள் யாவுந், திருந்தியவா னவர்பணிய மன்று தேவர்பிரான் கழலிணையே சேரவோதி, விருந்திடுநா வுடையபயன் மேவி னோர்தா, மேலானோ மெனமகிழ்ந்து, விழிநீர் சோரப், பரிந்தருளாற் பரமனையே பாட வல்ல பான்மையா ரெமையாளு மேன்மை யாரே. 64
சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார்
பாரணவும் புலனந்தக் கரண மொன்றும் படராமே நடுநாடி பயிலு நாதங், காரணபங் கயன்முதலா மைவர் வாழ்வுங் கழியுநெறி வழிபடவுங் கருதி, மேலைப், பூரணமெய்ப் பரஞ்சோதிப் பொழிவு நோக்கிப் புணர்ந்தணைந்த சிவாநுபவ போக மேவுஞ், சீரணவு மவரன்றோ வெம்மை யாளுஞ் சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ளாரே. 65
திருவாரூர்ப்பிறந்தார்
பொங்கியமா தவமுடையார் வருண நான்கிற் பொருந்தினர்க, ளல்லாத புகழினுள்ளார், சங்கையிலா வருந்தவமுன் புரிந்தா,ரிங்குச் சார்விலா, ரிறைவனருள் சார்த லாலே, கங்கைவாழ் சடைமுடியா னருளை நீங்காக் கணநாத ரெனவாழுங் கருத்தர், கன்னிச், செங்கண்வரால் வளர்வாவி திகழு மாரூர்ச் சிறந்துளா ரெமையாளப் பிறந்து ளாரே. 66
முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்
செப்பலருந் தவமுடைய செம்மை யாளர், சிறுகாலே மலர்வாவி திகழ மூழ்கி, யொப்பிறிரு நீறணிந்து, நியதி யாற்றி, யோவாமே யைந்தெழுத்து 2முரைந்து, மேன்மைத், தப்பில்சிவா கமவிதியா லின்பா லன்பாந் தன்மையா னன்மையாந் தகையா ரென்று, முப்பொழுதுந் திருமேனி தீண்ட வல்ல முறைமையார் பிறவி தெறுந் திறமை யாரே. 67
பா - ம் - 1 கலைகள். 2 உணர்ந்துரைத்துத்.