தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

முழுநீறுபூசிய முனிவர்

கற்பமனு கற்பமுப கற்ப மென்றிக் கடனணைந்த திருநீறுங் கனற்க ணீறும் பொற்புயை வரசனாசா னங்கி யாறு பொல்லாத பூமியெதிர் புனைத லாகா வற்புதமாந் திரிபுண்ட மதியின் பாதி யகிலாங்கந் தீபமிகு மழகார் வட்ட முற்பொலிய வுடலணியு முறையா ரன்றோ முழுநீறு பூசவல்ல முனிவர் தாமே.

அப்பாலுமடிச்சார்ந்தார்
தாராரு மூவேந்தர் பயிலுந் தொல்லைத்

தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ் சார்ந்த

சீராருந் தொண்டர்களு, மண்ட ரேத்துந்

திருத்தொண்டத் தொகையருளாற் செப்புங் காலத்

தோராருந் தொடையிலுறா திப்பா - லப்பா

லெந்தைபிரா னடியடைந்த வியல்பி னோரு,

மாராத காதலுடை யவர்க ளன்றோ

வப்பாலு மடிச்சார்ந்த வடியார் தாமே.

69

பூசலார் நாயனார்

பொருவருந்தண் டகநாட்டுநின்ற வூர்வாழ் பூசுரர்கோப், பூசலார், புந்தியாலே யிருநிதியந் தேடி,யா லயமு மாக்கி, யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங்காலை, யரனதனைக் காடவர்கோற் கருள, மன்னனந்நகரமணைந்தவ்வாறறிந்து, தாழ விரவுமனக் கோயிலுற விருத்தி, யங்கண் வேண்டுவகொண் டிறைஞ்சி, யருண்மேவினாரே.

மங்கையர்க்கரசியார்
மங்கையர்க்குத் தனியரசி வளர்குலக் கொழுந்து,

மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்,மண்

சங்கைகெட வமண்சமயஞ் சாட வல்ல

சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த

பொங்குதிரு வருளுடைய போத வல்லி,

பொருவினெடு மாறனார் புயமேல் வாழுஞ்

செங்கலச முலையாட னருளா லின்பஞ்

சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.

71
நேச நாயனார்
சாலியர்கோக், காம்பீலித் தலைவர், மேன்மை

தாவாத புகழ்நேசர், தஞ்சொ லென்றுங்

கோலியமைந் தெழுத்தோதிச், சிந்தை யுன்னிக்,

கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து, வாழ்வார்,

சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்

திருந்தியவெண் கோவணமுஞ் சேர லீந்து,

பரலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்,

பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

72
புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 16:37:34(இந்திய நேரம்)