Primary tabs
கோச்செங்கட்சோழ நாயனார்
வியன்சிலம்பி, யதுவழித்த வெள்ளா னைக்கை
யுண்ணாடிக் கடித்தவுட லொழியச், சோழனுயர்குலத்துச் சுபதேவன் கமலத் தோங்கும்
பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச், செங்கட்பெருமானாய்த், தென்னவராய்ப், பெருங்கோயில்
பலவுங் கண்ணார்வித், துயர்தில்லை மறையவர்க்கு முறையுள்கனகமய மாக்கி, யருள் கைக்கொண் டாரே.
திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்
பேணுதிரு நீலகண்டப் பெரும்பாண னார்சீர்
நிறந்தருசெம் பொற்பலகை யால வாயினிமலன்பாற் பெற்றாரூர் நேர்ந்துசிவன் வாயி
றிறந்தருளும் வடதிசையே சேர்ந்து, போற்றித்,திருஞான சம்பந்தர் திருத்தாள் வாழ்த்தி,
யறந் திகழுந் திருப்பதிகம் யாழி லேற்றி,யாசிறிருப் பெருமணஞ்சேர்ந், தருள்பெற் றாரே.
சடைய நாயனார்
தவரதிபர், தம்பிரான் றோழ ராய
வெங்கள்பிரான் - றவநெறிக்கோரிலக்கு - வாய்த்தவிசைஞானி யார்தனய - ரெண்ணார் - சிங்க -
மங்கையர்க டொழும்பரவை மணவாள நம்பி -வந்துதிக்க மாதவங்கள் வருந்திச் செய்தார்,
வெங்கணரா விளங்குமிளம் பிறைசேர் சென்னிவிடையினா ரருள்சேர்ந்த சடைய னாரே.
இசைஞானியார்
நாவற் றிருப்பதிக்கோர் செல்வச்சைவ நாயகமாஞ் சடையனார் நயந்த வின்பப் பூவைக் குலமடந்தை, பொற்பார்கொம்பு, புனிதமிகு நீறணிந்துபோற்றிசெய்தே, யாவிற் றிகழ்தலைவன் வலிய வாண்ட வாரூர ரவதரிக்க வருந்தவங்கள் புரிந்தார், யாவர்க்கு மெட்டாத விசைந்த வின்ப விசைஞானி யெனஞான மெளிதா மன்றே. 76
மந்தணர்பொய் யடிமையிலாப் புலவ ராசில்
பத்தர்முத லெழுவரோ டொன்பதின்ம ரேழொன்பதின்மர்தனிப் பேரெண்ணொன் பதின்ம ராய