Primary tabs
வீரிரண்டா யிரத்திருநூற் றைம்பத்து மூன்றா
முத்தமநல் விருத்தத்திற், 1பயனாஞ் செய்யுளுல கெழுபத் தைந்தெனநின் றுரைக்கு மன்றே.
திருத்தொண்டர் புராணசார முற்றிற்று
சிறந்ததனிப் பெயராக வறுபதின்மேன் மூவர்
மல்லன்மிகு கூட்டப்பே ரருள்சேர்ந் தார்கண்மாதவத்தோர் மும்மூன்று வகைபெற் றார்க
ளில்லறத்துந் துறவறத்து மிருந்து வாழ்ந்தேயியல்பாகச் சிவபதநான் கிசைந்தார் தம்மை
யல்லலறுத் தெனையாண்ட சைவசிகா மணியாரருட்புலியூ ருமாபதியா ரருள்செய் தாரே.
- அபீயுக்தவரக்கு.
ஆகத் திருவிருத்தம் - 78
1 பயனாஞ் செய்யுள் உலகெழுபத்தைந்து என்றது - திருத்தொண்டர் புராணப் பயன் என்னும் திருத்தொண்டர் புராணசாரச் செய்யுட்டொகை எழுபத்தைந்து என்று குறித்தபடி என்பர். காப்புச் செய்யுள் நீக்கி எழுபத்தைந்து விருத்தங்களால் இந்நூல் அமைந்திருத்தல் காண்க. இந்நூற்குத் திருத்தொண்டர் புராணப்பயன் என்று ஆசிரியர் பேரிட்டனர் என்பது இதன் காப்புச் செய்யுளில் திருத்தொண்டர் புராண மேவுந் திருந்துபய னடியேனுஞ் செப்பலுற்றேன் என்றதாலும் அறியப்படும். இதில் தொண்டர்சீர் உரைத்தான் என்றது சேக்கிழார் பெருமானை.