Primary tabs
உ
கொற்றவன்குடி - உமாபதி சிவாசாரியார்
அருளிய
சேக்கிழார் புராணம்
என வழங்கும்
பாயிரம்
காப்பு
வெண்பா
வருண்மொழித் தேவர்புரா ணஞ்சீர் - வருவதற்கு
மைம்மா மழைபோன் மதத்தான் றிரண்டபுழைக்
கைம்மா வதனத்தான் காப்பு.
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வா
யானைமுக னைப்பரவி யஞ்சலிசெய் கிற்பாம்.
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியுந் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற
ஏராரு மணிமன்று ளெடுத்ததிரு வடிபோற்றி.
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றி னொளிவிளங்க
வரந்தைகெடப் புகலியர்கோ னமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி.
புலிமுனியும், பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக்கோ புரவாயில்
நிலவியகற் பகக்கன்றி னிறைமலர்த்தா ளிணைபோற்றி.
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத