தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

அறுவரெவ ரவர்செங்கட் சோழர்புகழ்ச் சோழ

ரருண்மானி யிடங்கழியார் நெடுமாறர் சேரர்;

குறுநிலமன் னவரைவர் நரசிங்க முனையர்

கூற்றுவனார் கழற்சிங்கர் மெய்ப்பொருளை யடிகள்;

முறைமைவணி கரிலைவர் காரைக்கா லம்மை

மூர்த்திகலிக் கம்பரமர் நீதியியற் பகையார்;

திறமைபுரி வேளாளர் பதின்மூவர் மூர்க்கர்

செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி;

39
தாயனாரிளையான்றன் குடிமாற ரரசு

சாக்கியர்கஞ் சாறர்விறன் மிண்டர் முனையடுவா

ரேயர்கோன் கலிக்காமர்; கோபாலர் மரபி

லிருவர் திரு மூலனா ரானாயர்; குயவர்

சேயபுகழ்ந் திருநீல கண்டனார்; பாணர்

திருமரபிற் றிருநீல கண்டத்துப் பாணர்;

மேயதிற லதிபத்தர் பரதவர்; கண்ணப்பர்

வேடர்; மர பினிற் சான்றா ரேனாதி நாதர்;

40
நேசனார் சாலியரிற்; றிருநாளைப் போவார்

நீசமர பினி; லெங்க டிருக்குறிப்புத் தொண்டர்

தூசொலிக்கு மேகாலி மரபு; தில தயிலத்

தொழின்மர பிற்கலியனார்; மரபுகுறித் துரையாக்

காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டி

கணம்புல்ல ரெறிபத்தர் காரியார் குறும்பர் தேசுடைய பத்தர்பர மனைப்பாடு வார்கள்

சித்தத்தைச் சிவன்பால்வைத் தாராரூர்ப்

பிறந்தார்,
41
செப்பரிய பொய்யடிமை யில்லாதார் மெய்யிற்

றிருநீறு பூசுமுனி வர்களுலகு தன்னில்

அப்பாலு மடிச்சார்ந்தா;ரிவர்கடமிற் சிலபே

ராய்ந்ததமிழ்ப் பேர்சிலபேர்; மலையாளர்

சிலபேர்; தப்பாத தெலுங்கர்சிலர்; மற்றுளதே சத்தோர்

தவஞ்செய்து பரகதியை யடைந்தவர்கள் சிலபே;

1ரிப்போது மிருந்தரனை வழிபடுவோர் சிலபே;

ரினிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே;

42
திருஞான சம்பந்தர் திருநாவுக் கரையர்

திருமூலர் நெடுமாறர் மங்கையருக் கரசி

கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர்

கணநாத ரப்பூதி சோமாசி மாற

1 தொகையடியார்களில் முத்திபெற்றாரொழிய “இப்போது மிருந்தரனை வழிபடுவோரும் - இனிமேலும் வருவோருமாவார் - தில்லை வாழ்ந்தணர், பத்தராய்ப் பணிவார், பரமனையேபாடுவார், சித்தத்தைச்சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார், முழுநீறுபூசியமுனிவர், அப்பாலு மடிச்சார்ந்தார், என்னுமிவர்களேயாம் - ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் சுவாமகள் உரை.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:17:02(இந்திய நேரம்)