Primary tabs
இடத்தில் தமது ஆன்மார்த்த
நாயகராகிய திருநாகேச்சுரத்திறைவர்
நினைவுக்கு அறிகுறியாகத் திருக்கோயிலும், திருமடவளாகமும் அமைத்துத்
தாபித்து, அதற்குத் திருநாகேச்சரம் என்று பேருமிட்டு, அதற்கு நித்திய
நைமித்திக விசேட உற்சவாதிகளும் நியமித்தார். அவ்வூரிற்றமக்கிருந்த நிலம்
முதலிய பொருள்கள் அனைத்தையும் அத்திருக்கோயிற்
றிட்டச்செலவுகளுக்கென்று நியோகித்தார். அந்நிபந்தமும் திருக்கோயிலும்
இன்றும் அவ்வாறே நின்று நிலவிச் சிறப்பாய் நிகழ்ந்து வருகின்றன.
அருண்மொழியார் அறநெறியிற் சீர்பெற அமைச்சியல்
நடத்தினர்.
அந்நாளில், உலகர் பலரும் பாராட்டி வந்ததுபோலவே, அருங்கலை
விநோதரான இவரது அரசர் அநபாயரும் சீவகசிந்தாமணி என்ற சமண
காவியத்தைப் பெரிதும் பாராட்டி அதைப் பலவாறும் கேட்டு
மகிழ்வாராயினார். அதுகண்டு, அரசனை உண்மை நெறியிற் றிருத்துதல்
அமைச்சரது கடமைகளில் ஒன்றாதலின், ஆசிரியர் அருண்மொழியார் “இது
பொய்ந்நூல்; சிற்றின்பக் கதைகள் மலிந்து மக்களைத் தீய வழியிற்
புகுத்தும்; மறுமைக்காகாது; இம்மைக்குமாகாது; இம்மைக்கும் மறுமைக்கும்
உறுதி தந்து வீடு தருவன சிவ கதைகளேயாம்“ என்று அறிவுறுத்தினர்.
அதுகேட்ட அரசர் “அவ்வாறாயின் அச்சிவகதைகள் யாவை?“
எனக்கேட்டனர். “திருவாரூர் இறைவர் தாமே ‘தில்லைவா ழந்தணர்த
மடியார்க்கு மடியேன்' என்று முதலடி எடுத்துக் கொடுத்து அறிவுணர்த்தி
யருளியபடி நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகை பாடியருளினர். அதனை
விரித்துத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் பொருளுரைக்கக் கேட்ட
நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டத் திருவந்தாதி பாடினர். இவ்வாறு
வந்த திருத்தொண்டர் வரலாறுகளை இராசராசசோழதேவர், சிவாலய
முனிவர் முதலாகப் பற்பல பெரியோரும், உலகரும் பராட்டிக்
கொண்டாடினர்“ என்று அவற்றின் வரலாற்றினை அருண்மொழித்தேவர்
எடுத்துச் சொல்லியருளினர். அரசர் “அச்சரிதங்களைச் சொல்க“ எனக்
கேட்க, அருண்மொழியாரும், அவ்வாறே தில்லைவாழந்தணர் சரிதம்
முதலாகத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் சரிதம் ஈறாக விரித்துரைத்தனர்.
அதுகேட்ட அரசர் மிக மகிழ்ந்து “இவ்வடியார்கள் அவதரித்த நாடும்,
ஊரும், மரபும் அவரவர்கள்பேரும், செய்த திருத்தொண்டின் வரலாறும்
அடைவுபடப் பிரித்தும் விரித்துங் உலகெலாம் கேட்டுய்யுமாறு ஒரு பெருங்
காப்பியமாகச் செய்து தருதல்வேண்டும்“ என்று அமைச்சரை வேண்டினர்.
அவருமிசைந்தார். அதன் பொருட்டுத் தக்க திரவியங்களையும் தந்து தக்க
பரிசனங்களுடன் அவரை அவர் விருப்பினபடியே திருத்தில்லைக்கு
வழியனுப்ப, அவரும் அங்குச் சென்று சேர்ந்தனர். தில்லை யெல்லையை
வணங்கிக்கொண்டு அம்பலவாணர் திருமுன்னர்ச் சென்று, வணங்கி,
உள்ளமுருகி, நைந்து, கண்ணீர்வார்ந்து, உரோமம் சிலிர்க்கப்,
பேரின்பவெள்ளத்தில் மூழ்கி, வணங்கி, நின்று, “அடிகளே! உமது
அடியார்களது சீர்களை அடியேன்உரைத்திட அடியெடுத்துக் கொடுத்து,
இடர்களைக் களைந்தருள வேண்டும்“ என்று வேண்டி இறைஞ்சினார்.
அப்போது அம்பலவாணர் அருளினால் அசரீரிவாக்கு “உலகெலாம்“ என்று
உரை செய்த பேரொலி எழுந்து அடியார் செவிப்புலத்து எங்குமாகி
நிறைந்தது. அது கேட்ட தில்லைவாழந்தணர்களும் மடபதிகள் முதலிய
யாவரும் அம்பலவாணரை வணங்கி மகிழ்ந்தனர். அருண்மொழித் தேவரும்
திருநெறித்தலைவர்களாகிய சமயகுரவர்களை வணங்கிச், சிவசாதனங்களைத்
தரித்துக்கொண்டு, ஆயிரக்கான் மண்டபத்திலே யிருந்து, திருவருளையே
மேற்கொண்டவராய், அம்பலவர் எடுத்துக்கொடுத்த மொழியையே முதலாக
வைத்து, அன்று முதலாகப் புராணத்தை முறையாகப் பாடி முடித்தருளினர்.
இவர் புராணம் பாடிய சிறப்பைச் சந்தான குரவர் பெருமானாகிய
உமாபதிசிவாசாரிய சுவாமிகள்,