Primary tabs
என்றவாறாம். சிவத்தையடையும்
எல்லாத் தொண்டினுள்ளும் சித்தம்
சிவன்பால் வைத்தல் வேண்டப்படும்; ஆயினும் அது முடிவுபெற்று நிற்கும்
சிறப்பு நோக்கி இதனை இவ்வாறு விரித்துக் கூறினார்.
32. அத்தனையே
- அத்தன் திருமேனியை. திருமேனி என்று
திருத்தொண்டத் தொகையிற் கூறியது அத்தனாகிய சிவபெருமானது
திருமேனியையே என்று விளக்குவார் தேற்றேகாரந் தந்துங் கூறினார்.
34. மெய்ப்பூசல்
- மெய் - உள்ள மெய்த் தன்மையாலே தம்
நினைப்பினால் எடுத்த மனக்கோயிலில் இறைவனைத் தாபித்துப் பலநாட்
பேணிய சிறப்புக் குறித்தது.
35. வாழ் செங்கட்
சோழனார் - சிலந்தியா யிருந்தபோது தம்
வாய்நூலாற்றிருநிழற்பந்தர் செய்து, இறைவன் றிருமேனிமேற் சருகுவிழாது
காத்து, அப்பந்தரின் கீழ் இறைவனை வாழச்செய்து, வழிபட்டமையாலே,
திக்கெல்லாந்தன் செங்கோல் முறை செல்லத் தமது ஆணைப்பந்தர்
நிழற்கீழ் உலகமெல்லாம் வாழ நின்ற பேரரசும், இறைவனுக்கு 78
மாடக்கோயில்கள் அமைத்து அவற்றிற்கு வேண்டும் நிபந்தமும் அமைத்த
வாழ்வும் சோழனாய் உலகாண்டதே யன்றிப் பாண்டிநாடுங் கொண்டு
தென்னவனாயும் உலகாண்ட வாழ்வும்; மூவர் முதலிகளாலும்
பாராட்டப்பெறும் வாழ்வும், அதுவேயுமன்றி, வைணவ
ஆழ்வாராதியார்களாலுந் துதிக்கப் பெறும் வாழ்வும், என்று மழியாப்
புகழ் வாழ்வும், பெற்ற சிறப்புக் குறிக்க வாழ் என்ற அடைமொழி
தந்தோதினார்.
36. பான்மையார்
- பான்மை - ஊழ். தன்மை என்றலுமாம்.
முன்னைப் பான்மை வழியாற் பாணர் மரபிற் றோன்றினாரேனும்,
ஆளுடைய பிள்ளையார் திருவடிச் சார்புபெறும் பான்மையும், அவர்
தேவாரங்களை யாழிலிட்டுப் பிறிவின்றிச் சேவிக்கப்பெற்றுடனிருந்து
வரும் பான்மையும், அதனாலே அவர் முன்னே பரமர் தாளடையும்
பான்மையும் பெற்றாராதலின் பான்மையார் என்றார். புராணத்தில்
வரும்பான்மையினிற் பெரும்பாணர் (12) என்ற சேக்கிழார்
திருமொழி இங்குப் போற்றப்பட்டது காண்க.
36-37. மேன்மைச்சடையர்
- குவலயத்தி னலம்விளங்கும்படி,
நாம் விளங்கும்படி, நற்றவத்தின் பலன் விளங்கும்படி என்று நம்பியாண்டார்
நம்பிகளும், ஞாலமெல்லாங் குடிவாழ என்று சேக்கிழார் சுவாமிகளும்,
போற்றியுள்ள பயனை உலகுக்குத் தரும்பொருட்டுத் தாம் வரங் கிடந்து
நம்பியாரூரரைப் பெற்றீந்த மேன்மை குறித்தார். இதனையே தம்பிரான்
றோழராய எங்கள் பிரான் - தவநெறிக்கோரிலக்கு - எண்ணார் சிங்கம் -
மங்கையர்க டொழுப்பரவை மணவாள நம்பி - வந்துதிக்க மாதவங்கள்
வருந்திச் செய்தார் என்று போற்றினார். உமாபதிசிவனார்.
38. தொடை என்றது திருத்தொண்டத்தொகை.
39. இந்தத் திருநாமக்கோவைதனை
மந்திரமாக் கொண்டு என்றது
இக்கோவையின் இயல்பு குறித்தது. இதிற் கண்ட திருத்தொண்டர்
திருநாமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் மந்திரமாம். ஆதலின் இக்கோவை
முழுதும் மந்திரமேயாம். ஞானசம்பந்தரென்னு நாமமந்திரமுஞ்செல்ல,
ஆனபோ தயர்வு தன்னை யகன்றிட (திருஞான - புரா - 721) என்றவிடத்து
இத்திருநாமங்கள் மந்திரங்களாமாறும், அவற்றைக் கேட்டலின் பயனுங்
குறித்தது காண்க. அப்பூதியடிகள் திருநாவுக்கரசு என்ற திருநாமமாகிய ஓர்
சொற்றா னெழுதியுங் கூறியுமே யென்றுந் துன்பில் பதம் பெற்றார்
என்றதுங் காண்க. இக்கோவையிலே முழுதும் திருத்தொண்டர்
திருநாமங்களை அவ்வடிப்படியே தனித்தனியாகக் காணுமாறு கோத்தனர்
ஆசிரியர்; அதுவும் திருத்தொண்டத்தொகையின் முறையிலே கோத்தனர்;
அதுவும் கலிவெண்பாவாக யாத்தனர். செய்யுள் நோக்கி