Primary tabs
யின்றியமையாத இடத்து
இடையிடையே தந்த மிகச் சில அடைமொழிகள்
தாமும் மேலே கண்டபடி அவ்வச் சரிதங்களின் உள்ளுறையை நன்கு
விளக்குவனவாய் முன்னோர்மொழி போற்றுந் திறத்தில், அணிபெற
அமைந்துள்ளன. இத் தெய்விக அமைப்பும் அழகும் எமது மாதவச் சிவஞான
முனிவரது திருவாக்கின் சிறப்புக் காட்டுவன. இதனை மந்திரமாகக்கொண்டு
என்றருளியதன் காரணம் மேலே காட்டியபடியாம். மந்திரம் -
எண்ணுவோனைக் காப்பது என்பதாம். ஆதலின் இதனை விதிப்படி
ஓதுவார் பெறும் பயனாவது அத்துவிதானந்தப் பரமுத்திப் பெருவாழ்வேயாம்!
இது சத்தியம்! என்று ஆணையிட்டுக் கூறியருளி முடித்ததும் காண்க.
40-41. மயிர்சிலிர்த்து
- நைந்து - உருகி - மெய்யன்பால் - என்றும்
- என்பன மந்திரங்களை எண்ணுவதும் ஓதுவதுமாகிய முறை வகுத்துக்
காட்டியவாறு.
41. பெறுவார்கள்
- இது முன்னைத் தவத்தளவாற் கிடைக்கும்பேறு -
எல்லார்க்கும் எளிதன்று என்பதாம்.
42. கைதவம்
- கீழ்மை; புல்லறிவு - கைதவத்திற்குக் காரணமாகிய
அறியாமை - ஆணவம்; கற்பனை - பொருளல்லவற்றைப் பொருள்
என்றுணரும் மருள். மையல் - மயக்கம் - திரிபுணர்ச்சி.
43. அத்துவிதம்
- இரண்டறக் கலத்தல். ஆனந்தம் - நண்ணறிய
சிவா நந்தமாகிய பரமசுகம். இறவாத பேரின்பம் - அகண்டம் -
அளவுட்படாதது. பரிபூரணம் - குறைவிலா நிறைவு. நித்தியம் -
அழிவில்லாமை. இவ்வாழ்வே முத்தி நிலையாம். திருத்தொண்டர்
திருநாமங்களை விதிப்படி யெண்ணின் அவை முத்திப் பேறளிப்பன
எனப் பயன் கூறியவாறு.
44. நிசம்
- உண்மை - சத்தியம் - உறுதி - நிச்சயம் - என்ற
ஆணை.
இத் திருநாமக்கோவை மெய்யன்பர்
என்று தொடங்கி, நிசம்
என நிறைவு பெற்றது. உண்மையே ஆதி; உண்மையே அந்தம்; இதனுள்
நிறைந்த முழுமையும் - உண்மையே என்றதாம். சத்தாதல்
இறைவனதிலக்கணம். அவனை அணைந்தோர் தன்மையும் அஃதேயாம்
என்றது குறிப்பு.
இதனை நாடோறும் விதிப்படி பாராயணஞ் செய்வோர்
எல்லா
நலன்களையும் பெறுவர் என்பது சத்தியம்!
மெனத்
தொண்டர் சீர்பரவு சேக்கி ழான், வரிசை துன்று குன்றைநக
ராதிபன்,
தண்ட காதிபதி, திருநெ றித்தலைமை தங்கு செங்கைமுகில்,
பைங்கழற்,
புண்டரீ கமலர் தெண்ட னிட்டுவினை போக்கு வார்பிறவி
நீக்குவார்.
வாக்கி னாற்சொல்ல வல்லபிரா னெங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம்.