தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேக்கிழார்சுவாமிகள் பிள்ளைத்தமிழ்த் திரட்டு


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திரிசிரபுரம் - மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்
இயற்றிய

சேக்கிழார்சுவாமிகள்

பிள்ளைத்தமிழ்த் திரட்டு

பாயிரம்

விநாயகக்கடவுள் வணக்கம்
மாமேவு வான்பிறை முடிப்பிறை யிரண்டென்ன

வாய்க்கடைத் தோற்றியவிரு

மருப்பிரண் டென்னவங் கைக்கோ டிரண்டென்ன

மார்பின்முத் தாரமென்னப்

பாமேவு பேருதா பந்தமென வரைசூழ்

படாமெனத் தாளின்முத்தம்

பதித்தகழ லெனவிரவ மேலோங்கு பேருருப்

பண்ணவனை யஞ்ச லிப்பாம்

ஏமேவு ஞானசபை யிறைவர்தம் மேனியி

னிணங்குற வெழுப்புலகெலா

மென்னு மறை யாதியாக் கொண்டவ ருயிர்க்கருளு

மியல்பனைத் துந்தெரித்து

நாமேவு மம்முதலோ டொன்றவினை யுருபுதொக

நான்கன்டி யாதிசெய்து

நாற்சீரி னானெறி விளக்கியொளிர் சேக்கிழார்

நற்றமிழ்க் கவிதழையவே.

காப்புப் பருவம்
2.
மும்மைமறை யும்பரவு மும்மையுல கும்புகழு

மும்மையாப் பகரமாதி

மும்மையுயிர் குறினெடி றனித்துமத சவ்வூர்ந்து

முதலமையு நாமமுற்றார்

செம்மைபெறு மும்மையாம் வருணத் துதித்துச்

சிறந்தோங்கு மூர்த்தியார்முற்

செறியுமிகு மும்மையார் செம்பொற் பதரம்புயஞ்

சென்னிவைத் தேத்தெடுப்பா

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 14:59:01(இந்திய நேரம்)