Primary tabs
நண்ணவொண் பொருளாதலா
னாடுமுழ வாரவல மியைதலா லியாவோருநாவலர் பிரானென்னலால்
வெம்மைதவிர் புகலியார் முதன்மூவ ரும்புகலும்வேதத் தமிழ்க்கணுள்ள
மெய்ம்மையை விரித்துத் தெரிந்தருள்செய் குன்றையூர்வேந்தைப் புரக்கவென்றே.
பெருவாழ்வே!
பொள்ளலின் முத்தே! கள்ளமில் வித்தே!புரையில்
சுவைப்பாகே!தண்ணிய வமுதே! மண்ணியன் மதியே! தமிழ்நா
வலரேறே!
சத்துவ நிதியே! பொத்திய மலநோய் சாடுபெரும்பகையே!
யெண்ணிய வன்ப ருளத்தமு தூற வினிக்குநறுந்தேனே!
யென்றும் பத்தி ரசங்கனி கனியே! யெந்நாளினுமெங்கட்
கண்ணிய பொருளே! யாய்பவர் தெருளே! யாடுகசெங்கீரை
யாரரு ளாகர! சேவையர் காவல வாடுகசெங்கீரை
சிந்தையெலாம்,
சுவண மணக்கு மாடையெலாந், தொங்கன் மணக்குந்
தோள்களெலாஞ்
சேறு மணக்குங் கழனியெலாஞ், செல்வ மணக்குமாடமெலாந்,
தென்றன் மணக்கு மேடையெலாந்,தெய்வமணக்குஞ் செய்யுளெலா,
நீறு மணக்கு நெற்றியெலா, நெய்யே மணக்குங்கறிகளெலா,
நெருப்பு மணக்குங் குண்டமெலா, நேய மணக்கும் வீதியெலாஞ்சாறு மணக்குங் குன்றத்தூர்த் தலைவா! தாலோ
தாலேலோ
சகலா கமபண் டித!தெய்வச் சைவா! தாலோதாலேலோ.
னகுபா சுரமுத லுரைசெய் தலினா னவிலுரை
யாசிரியன்
நீடிய பரசமயக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய்நிலையாற் போதகாசிரி யன்,னிவை நிகழ்தொறு
நிகழ்தோறும்
ஆடிய ஞானத் திறனுற லான்ஞா னாசிரி யனு,நீயென்றான்றோர் பலரும் புகழப் படுபவ! வகில
மெலாஞ்சென்று
கூடிய புகழ்சால் குன்றத்தூரன்! கொட்டுக சப்பாணிகொற்றச் சேவையர் காவல! நாவல! கொட்டுக
சப்பாணி
நீடுஞ் சைவப் பெருவாழ்வே! நிலவா நின்ற
குணக்குன்றே!
வலஞ்சார் பெருநா வலரேறே! மாறா வருட்சிந்தாமணியே!
மதிப்பார் மதியு ளெழுஞ்சுடரே! வாழ்த்து வார்தம்
பெரும்பேறே!