தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

3. ஓவிய நான்முகனெழுத வொண்ணாமையுள்ளத்தான்
மேவிய வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ - 287.

4. முன்னேவந் தெதிர்தோன்று முருகனோ?.....மாரனோ? முதலியன -
290. (286 - 287 - 290 - பாட்டுக்கள் ஐயம் என்ற அகப்பொருட்டுறையில்
அமைந்தன. இவற்றை ஐயவுவம அணிபெற அமைத்த அழகும் காண்க.).

5. சிலேடையுவமம் :- சொற் பொதுமையால் ஒப்புமை கூறுதல்.

1. மாலினுந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ், சால்பினாற் பல்லுயிர்
தருதன் மாண்பினாற், கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையால்,
போலுநான் முகனையும் பொன்னிமாநதி - 54.

2. ஓங்கி -நிகரின்றி மிக்கு - வெண்மையுண்மைக் கருவினாம்
வளத்தவாகி - சுருள் விரித்து - அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல
அலர்ந்தன கதிர்கள் - 71.

3. கலன்கள் விரவலால் - பேரொலியால் - பலவாறு மடுத்தலால் -
ஆரூர் வீதிகள் அளக்கர் போன்றன - 94.

4. நான்மறை நாதம்பயின்ற பண்புமிக - வெண்கொடியாடுஞ்சீர் -
நாவொலி - திசைகணான்கெதிர் புறப்படல் - இவற்றால், அயன் பொற்
சதுர்முகங்கள் எனவாயின தில்லைத் திருவாயில் கணான்கு - 243.

6. தற்குறிப் பேற்ற உவமம் :-

1. வித்தகர் தன்மைபோல விளைந்தனசாலி - 72.

2. இஞ்சித் தண்கிடங்கு (அகழி) சூழுங்காட்சி, சிலம்பொலி போற்று
நான்மறைப் பதியைநாளும் வணங்கக் கடல்வலங்கொள்வதுபோற்
புடைசூழ்வது போன்றது - 241.

3. அனங்கன்மெய்த் தனங்களீட்டங் கொள்ளமிக்குயர்வ போன்று
கொங்கை மிக்குயர்ந்தன - 282.

7. உண்மையுவமம் :- முதலிற் கண்டு கருதியது உண்மையன்று.
இதுவே உண்மை - என்ற குறிப்புடன் ஒப்புமை கூறுவது.

1. கரும்பல்லநெல் - கமுகல்ல கரும்பு - அரும்பல்ல முலை -
அமுதல்லமொழி - என வருவன - 65.

8. நிந்தையுவமம் :- உவமானப்பொருளின் உயர்வைத் தாழ்த்திக்
கூறுவது போலக்கூறி உவமேயத்தின் உயர்வு தோன்றக் கூறுதல்.

1. சூதும் பங்கயமுகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந்து - 167.

2. கொங்கை கோங்கரும்பை வீழ்ப்ப - 282.

9. இல்பொருளுவமம் :- அபூதவுவமை என்பர் வடநூலார்.

1. புண்ணியத்தின் புண்ணியமோ, புயல்சுமந்து விற்குவளை பவளமலர்
மதி பூத்த விரைக்கொடியோ - 286.

2. பொன்றிகழ் குன்று வெள்ளிப் பொருப்பின்மேற்
பொலிந்தென்ன - 434.

3. அருகு நாப்ப ணறிவருங் கங்குறான், கருகு மையிரு ளின்கணங்
கட்டுவிட், டுருகின்றது போன்றது - 454.

4. வண்ணநீடிய மைக்குழம்பாமென்று - 455.

10. மெய்யுவமம் :- வடிவு பற்றிய ஒப்புவமை.

1. காவிரி, மாதர் மண்மடந்தை பொன்மார்பிற் றாழ்ந்ததோர், ஓதநீர்
நித் திலத் தாமமொக்கும் - 52.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:40:46(இந்திய நேரம்)