Primary tabs
பொருளணிகளுட் சில :-
I தன்மை
:- (அ) பொருட்டன்மை. 1. உல கெலாமுணர்ந்
தோதற்கரியவன்-1. 2. வாரிசொரியும் கதிர்முத்தும் - 492.
(ஆ) தொழிற்றன்மை :- எய்துமென் பெடை யோடு - 304.
ll உவமை :- 1. தொழிலுவமம் - அல்லது வினையுவமம். :-
1. மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கியவிருளை
யேனைப்
புறவிருள் போக்குகின்ற செங்கதிரவன் போனீக்குந் திருத்தொண்டர்
புராணம் - 10.
2. திரிமுகக்காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையுமாபோல்
வள்ளலுங்
கடிது சென்றான் - 196.
3. ஈன்றவான் கனைப்புக் கேட்ட கன்றுபோற் கதறி நம்பி - 214.
4. கதிர்மணி பிறந்த தென்ன வுருத்திர கணிகைமாராம்
பதியிலார்
குலத்திற்றோன்றி - 278.
5. மடவார் செய்த சைத்யோபசாரம் அழலின்
நெய்சொரிந்தாலொத்தன - 319.
2. ஏதுவுவமம் :- இன்ன காரணத்தால் இது இதனை ஒக்கும் என்பது.
1. அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்........புண்ணியந்
திரண்டுள்ளது போல்வது - 12.
2. வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும், உய்யவே
சுரந்தளித்
தூட்டு நீரதாதலின் காவிரி செய்ய பூமகட்குச் செவிலி போல்வது - 53.
3. வரைதரவந்த மேன்மையால், எண்ணில் பேரறங்களும்
வளர்க்கு
மீகையால், காவிரி, ஆளுடையநாயகி கருணையின் ஒழுக்கம் போன்றது - 56.
4. மலர் நீரால் வழிபட்டு, எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை
யிறைஞ்சலின் காவிரி, உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்கும் - 57.
5. நீற் றொளியால், நிறை தூய்மையால், அஞ்செழுத்
தோசை
பொலிதலால், தேவாசிரியன் ஆயிரம் பாற்கடல் போல்வது - 138.
6. ஆர்த்த வெள்வளைகளாலும், குழைமகரத்தாலும்,
ஒளிமணிகளாலும்,
பீலிச்கோலை நீணிரத் தரங்கத்தாலும், திருமண வெழுச்சி கடல் கிளர்ந்தது
போன்றது - 168.
7. உயிர்கட்கெல்லாந் தூய்மையும், இன்பமும், தண்மையும்
தந்து
போதலின் வெண்ணீற்றின் பேரொளி போன்றது நிலா - 308.
3. உருவுவமம்
அல்லது பண்புவமம்:- நிறம் முதலிய
பண்புபற்றிய ஒப்பு.
1. பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப் பன்னு
நீள்பனி
மால்வரைப் பாலது கயிலைத் திருமாமலை - 11.
2. கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ், புண்ணிய
நுதற்றிருநீறு பொலிவெய்த - 175.
3. தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வதென மீதே,
வெண்ணரை
முடித்தது விழுந்திடை சழங்க - 175.
4. மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு
வைத்துப்,
பொய் தவவேடங் கொண்டு- 473.
4. ஐயவுவமம்
:- உவமையும் பொருளுந் துணிவுறாது ஐயப்படக்
கூறுவது. ஐயம் - பலதலையாயவுணர்வு.
1. மானிளம் பிணையோ - 280 - என்ற பாட்டிற்காண்பன ஐயவுவமையின் பாற்படும்.
2. கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ - 286.