தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெயர் விளக்கம்


சிவமயம்

திருச்சிற்றம்பலம்
இந்நூலின்

திருமலைச் சருக்கம் - தில்லைவாழந்தணர் சருக்கம் -

இவைகளிற் கண்ட

பெயர் விளக்கம்

(இலக்கங்கள் பாட்டின் வரிசை எண்களைக் குறிக்கும்.)

அகத்தியர் (52) - இப்பதத்திற்குப் பொருள் விந்தமலையை
அடக்கியவர் என்பதாகும். சப்த இருடிகளுள்ளும் சிரேட்டர்.
கும்பத்தினின்றும் பிறந்தவர் என்ப. தேவர்களை வருத்திய விருத்திராசுரன்
தேவேந்திரனுக்குப் பயந்து கடலில் ஒளித்துக்கொள்ளத் தேவர்களின்
வேண்டுதலுக்கிணங்கிக் கடல்நீரை ஆசமனஞ்செய்து அவனை
வெளிப்படுத்திக் காட்டியவர். தென்றிசை நோக்கி வருகையில், தாம்
பொதியமலை யடைந்து திரும்பி வரும்வரை விந்தமலையினைப்
பணிந்தேயிருக்க எனப் பணித்து அதன் அகங்காரத்தை அடக்கியவர்.
இராமபிரானுக்கும், பல விருடிகளுக்கும் சிவதீக்கைசெய்து
உண்மையுபதேசங்கள் செய்தவர். சிவபெருமான் பார்வதிதேவியாரைத்
திருமணம் செய்தகாலத்துத்தேவர் முதலிய யாவரும் வடதிசையிற்சேரத்
தென்றிசை உயரவே அதனைச் சமனாக்குதற்பொருட்டுச் சிவபெருமான்
ஆணையின்படி தென்றிசை நோக்கிவந்துபொதிய மலையிலே தங்கியுள்ளார்.
காவிரியாற்றைத் தென்றிசைக்குக் கொணர்ந்தவர். முருகக்கடவுளிடமும்
சிவபிரானிடமும் தமிழுபதேசம் பெற்றவர். தமிழ்த் தலைவர் - தமிழ்முனி -
என்பர். தமிழ்ச்சங்க மிருந்து தமிழாராய்ந்தவர். இவர் செய்த நூல்
அகத்தியம் முதலியன. இவர் பெருமை நோக்கி "ஆதிமாதவ முனி
அகத்தியன்" என்றார் ஆசிரியர். "நீண்ட தமிழா லுலகை நேமியினளந்தான்"
என்றார் கம்பர். மலையுருக இசைபாடியவர். இராவணனைக் கந்தருவத்தாற்

அங்கம் - ஆறங்கம் (354) - வேதாங்கங்கள் எனப் பெறும்.
அவை சிக்கை - வியாகரணம் - கற்ப சூத்திரம் - நிருத்தம் -
சந்தோவிசிதி - சோதிடம் என ஆறாம். இவற்றுள் சிக்கை என்பது
பாணினியாலியற்றப் பெற்றது. இதனுள் வேதலோக சப்தங்களிரண்டுக்கும்
இலக்கணம் கூறப்பட்டன, வைதிகப் பிரகரணம் ஒரு தனிப் பகுதி.
வியாகரணம் - இதற்குப் பாணினி முதலியோர் கர்த்தாக்கள்;
காத்தியாயனரும் பதஞ்சலியும் வியாக்யானம் செய்திருக்கின்றனர்.
இதனுள் வேத சப்தங்களின் பிரகிருதி பிரத்யய ஞானம் விரிவாகப்
பேசப்பெற்றுள்ளதென்ப. கற்ப சூத்திரம் - ஆச்வலாயனர் - காத்யாயனர் -
ஆபஸ்தம்பர் - போதாயனர் - வைகானஸர் பாத்ரரயாயனர் - பரத்வாஜர் -
சத்யாசாடர் - ஹிரண்யகேசி முதலியவர்கள் ஆசிரியர்களாவார். இது
யஞ்ஞகர்மங்கள் ஆற்றும் வழியினைப் போதிக்கும். நிருத்தம் - இது வேத
சப்தநிகண்டு. இதன் ஆசிரியர் பாஸ்கமரிஷி என்பவர். சந்தோவிசிதி - இதன்
ஆசிரியர் பிங்கல முனிவர் என்பவர், வேதத்திற் கூறப்பட்ட காயத்திரி
முதலிய சந்தங்களினிலக்கணங்களை விளக்கும். சோதிடம் - இதற்கு
ஆதித்யாதியர் கர்த்தாக்கள். வைதிக கர்மங்களைத் தொடங்குவதற்கேற்ற
காலநிர்ணயங்களையும் அவற்றின் பலன்களையும் தெரிவிக்கும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:45:40(இந்திய நேரம்)