தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

அணுக்கன்றிருவாயில் (250) - தில்லையில் நடேசப்பெருமான்
சந்நிதியின் முற்றிருவாயில். இஃது பேரம்பலத்தினின்று மேனோக்கிச்
சிற்றம்பலத்துக்குக் கொண்டு சேர்க்கும் வாயில்களிலே சிற்றம்பலத்தினை
அடுத்து நிற்குந் திருவாயில் என்ப.

அதிகைவீரட்டானம் (228 - 234) - இது நடுநாட்டுச் சிவத்தலம்.
கெடில நதியின் வடகரையிலுள்ளது. வீரட்டானங்கள் எனப்படும் எட்டுத்
தலங்களில் ஒன்று. இதில் திரிபுரதகனம் செய்த வீரம் நடைபெற்றதாம். அப்பர்
சுவாமிகளை ஆட்கொண்ட தலம். விரிவு தலவிசேடம் (பக்கம் 271) காண்க.

 அநபாயன் (8 - 22 - 85 - 98 - 404) - பேரம்பலம்
பொன்னணிசோழன் (8) அபயன் (22) - அநபாயன் (திருக்குலம்) (404) -
இவரது அமைச்சராகிய சேக்கிழார் பெருமான் இவரது வேண்டுகோளின்படி
திருத்தொண்டர் புராணமியற்றினர். இதனை இவர் கேட்டு அரங்கேற்றுவித்துச்
செப்பேடு செய்து 12வது திருமுறையென வகுத்தனர். புராணம் பாடுவித்த
நன்றியின் பொருட்டு இவர் ஆசிரியரால் புராணத்தினுட் பன்னிரண்டிடங்களிற்
பாராட்டப்பெற்றுள்ளார். உமாபதிசிவாசாரியார் - மாதவச் சிவஞான சுவாமிகள்
முதலிய பல பெரியோர்களாலும் பாராட்டிப் போற்றப்பட்டவர். பேரம்பலமுந்
திருவெல்லையும் பொன்மயமாக்கியவர். திருநீற்றுச்சோழன் முதலிய
பெயர்களால் விளங்குபவர். இவர் காலம் 800 ஆண்டுகளின் முன் என்பர்.
இவர் சரித விரிவு திருத்தொண்டர்புராண வரலாற்றினும், அரசாங்கக்
கல்வெட்டுப் பரிசோதன அறிக்கைகளினும், எனது "சேக்கிழார்" என்ற
நூலினும் கண்டுகொள்க.

அநிந்திதை(34) - திருக்கைலாயத்தில் உமாதேவியாருக்குப் பணி
செய்யும் இரண்டு சேடிமார்களில் ஒருவர். இவர் சங்கிலியாராக அவதரித்துத்
திருவொற்றியூரில் கன்னிமாடத்திலிருந்து திருப்பணி செய்தவர். ஆளுடைய
நம்பிகளிடம் பிரியா வகைக்கு ஒரு சபதம் பெற்று, மணந்து, மீண்டும்
கயிலையடைந்தவர். திருமலைச் சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம்,
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம்
முதலியவற்றுள்ளும், நம்பிகள் தேவாரங்களுள்ளும், இவர் சரித விரிவு
கண்டுகொள்க.

அரசு - உடைய அரசு - உழவாரப் படையாளி (229) - அப்பர் சுவாமிகள்.

அருட்டுறை (211) - திருவெண்ணெய்நல்லூர்ச் சிவாலயத்தின் பெயர்.
அரம்பையர் (19 - 245) - தேவேந்திர சபையின் ஆடற்பெண்கள்.
தேவமாதர்.

அரவுலகு - (284) - நாகலோகம்.

அருந்ததி (363) - கருத்த முனிவர் புதல்வி. வசிட்டரது மனைவி.
கற்பிற் சிறந்தவள். கருநிறம் இயைந்த செந்நிற முள்ளவளாய் யாவருங் காண
நட்சத்திரபதம் பெற்றவள். உலகவர் மணஞ் செய்து கொள்ளுங்காற் கற்பிற்கு
இலக்கியமாக மணமகன் மணமகளுக்கு இவளைக் காட்டுதல் மரபும் மணச்
சடங்குகளில் ஒன்றுமாம்.

அமர்நீதி நாயனார் (501 - 526) - அறுபான்மும்மைத் தனியடியாருள்
ஒருவர். அப்பர் சுவாமிகளாலும் பாராட்டிப் பேசப்பெற்ற பெருமை யுடையவர்.
சரிதச் சுருக்கம் காண்க. (பக்கங்கள் - 686 - 687 - 688.)

   அம்பர் மரகாளம் (262) - இது சோழ நாட்டுத் தலங்களி லொன்று.
அரி செரலாற்றின் கரையிலுள்ளது. மாகாளர் பூசித்ததும் சூரபதுமன்
தங்கையாகிய அசமுகியைக் கைகுறைத்ததுமாகிய தலம். தலவிசேடம் (பக்கம்
- 313) காண்க.

   ஆரூர் (43 - 126 - 254 - 274 - 297 - 496) - தலவிசேடங் காண்க
(பக்கங்கள் - 163 - 164.) ஆரூரண்ணல் (358) - திருவாரூரில்
எழுந்தருளியுள்ள தியாகேசப்பெருமான். ஆலால சுந்தரர் (32 - 146) -
இப்பூவுலகில் அவதரிக்கு முன்னும், அவதாரத்தின் பின்னும் கயிலையில்
உள்ள நிலையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளது பெயர். அங்குச்
சிவபெருமானுக்குத் திருமாலை திருநீறு எடுத்தேந்தும் பணி செய்யும்

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:44:35(இந்திய நேரம்)