Primary tabs
கமலினி
(34 - 277) - திருக்கயிலாயத்தில் உமாதேவியாரது இரண்டு
சேடியருனொருவர். திருவாரூரில் பரவையாராக அவதரித்துச்
சிவபெருமானருளாற் சுந்தரமூர்த்தி சுவாமிகளை மணந்தவர். (பரவையார்
காண்க.)
கம்பையாறு
(44) - காஞ்சிபுரத்தின் தல நதி. இதன் கரையில்
உமாதேவியார் சிவபூசை செய்தபோது திருவிளையாட்டாலே ஆறு பெருக,
அம்மை முதல் வரைத் தழுவிக்கொள்ள அதனால் அம்மையாரது
முலைத்தழும்பும் வளைத்தழும்பும் கொண்டனர் என்பது புராணம் இதன்
கரையில் எழுந்தருளியவர் கம்பர். அவர் கோயில் "கம்பம்" எனப்படும்.
இந்நதி இப்போது நிலத்தின்கீழ் ஓடுகின்றது.
(திருக்குறிப்பு - புரா - பார்க்க.)
கயிலாயமலை
(11-22) - கயிலை (174) - முதற் பெருங்
கயிலை
(277) - சிவபெருமான் என்றும் எழுந்தருளி யிருக்கும் திருமலை.
பனிவரை - திருமலை - பொன்மலை - வெள்ளிமலை -
நொடித்தான்மலை - இமாலயம் என்றுஞ் சொல்லப் பெறுவது.
பனியுறைந்து "பொன்னின் வெண்டிறுநீறு புனைந்தென"த் திகழ்வது.
கலுழன்
(18) - கருடன் - விட்டுணுவுடன் செய்த போரில் தமது
தவ வலிமையால் அவரைச் செயித்தவர். செயித்தபின் நீ கேட்ட வரம் நாம்
கொடுப்போம் என்று பெருமிதங்கூற, விட்டுணு தமது ஊர்தியாக இருக்க
வேண்ட, அவ்வாறே அவரது வாகனமாகியவர். மிக்க வலிமையுடையவர்.
புள்ளரசு எனப்படுவர்.
கழுமலம் (257) - சீகாழி காண்க.
களிற்றுப்படி
(251) - யானைத் துதிக்கை வடிவினவாகிய
திரணைகள் இரண்டு புறமும் அமைந்துள்ள ஐந்து படிகள். களிற்றுக்கை
பிரணவத்தையும் ஐந்து படிகள் திருவைந் தெழுத்தையும் குறிப்பன.
தில்லைச் திருச்சிற்றம்பலச் சபையில் நடராஜ மூர்த்தியைச் சாரச்
செல்வதற்கு அமைந்த படிகள். திருவணுக்கன்றிருவாயிலைக் கடந்து
சென்று அடையத்தக்கனவாய் நடராசருக்கு அடுத்துள்ளன. யானைத்
துதிக்கை வடிவமுள்ள அத்திரணைகள் உயிர்ப்புற்றெழுந்து திருக்கடவூர்
உய்யவந்த தேவ நாயனாரருளிய திருக்களிற்றுப்படியார்
என்னும் சைவ
சித்தாந்த சாத்திர நூலினை நட்டபிரான் திருவடியிற் சேர்ப்பித்தன.
கற்பகம்
(15 - 270 - 286) - தேவ உலகத்துள்ள தேவமரம்.
கேட்டது கொடுக்கும் தன்மை வாய்ந்த தென்பர்.
காஞ்சி
(44) - காஞ்சிபுரம். திருவேகம்பம் என்று கூறப்படுவது.
உமா தேவியார் தனித் தவஞ் செய்து வெளிப்படக்கண்ட
திருக்கோயிலுடையது. பிரமனும் சரசுவதியும் பூசித்தது. இதன் விரிவு
திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திற் காண்க.
காவிரி
(52 - 59) - பொன்னி (54 - 404 -502
- 516 - 518) - தென்
இந்தியாவை வாழ்விக்க வந்த பெரியநதி. "பொன்னி" என்றும் அதற்குப்
பெயருண்டு. கவேர ஆசிரமத்தின் வழிவந்தமையால் காவேரி என்னும்
பெயராயிற்றென்ப. மேற்குத் தொடர்ச்சி மலைகளிற் குடகு நாட்டில்
சையமலையில் உற்பத்தியாவது. தென்னாடு போந்த அகத்திய முனிவரது
கமண்டலத்திருந்த இஃது, இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கிய விநாயகர்
காகவுருக்கொண்டு வந்து கமண்டலத்தைக் கவிழ்க்கவே, நதியாய்ப்
பெருகியது. அகத்தியர் வரத்தால் எல்லாத் தீர்த்தங்களும் வணங்கும் வரம்
அடைந்து அகண்ட காவேரியெனப் பெயர் பெற்றது. உலகத்தார்
பாபங்களைப் போக்குவது. "பொன்னி நன்னதி மிக்க நீர் பாய்ந்து புணரி
தன்னையும் புனித மாக்குவதோர் நன்னெடும் பெருந் தீர்த்தம்" என்று
பாராட்டப் பட்டது.
கிரியை
- சைவபாதங்கள் நான்களுள் ஒன்று. இது சற்புத்திர
மார்க்கம். இதனியல்புகளைக் "கந்த வர்க்கமும் கிளர்மணப் புகையும்
கலின்கொ டீபமும் புனிதமஞ்சனமும், கொந்த விழ்ந்தநன் மலருமற்
றுளவுங் கொண்டு மாயையின் குணங்களொன் றிலராய், ஐந்து சுத்திசெய்
தகம்புற மிறைஞ்சி யங்கி யின்கடன்