Primary tabs
பாததீர்த்தம் (இளமை
யாக்கினார் குளம்), அனந்ததீர்த்தம், நாககேசரி, பிரம
தீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல், குய்யதீர்த்தம் எனும் பத்துத்
தீர்த்தங்களுடையது. "தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்" என்று
தியாகேசப் பெருமான் தமது திருவாக்கினாற் சிறப்பித்தருளிய அந்தணர்கள்
வசிக்கும் தலம். பரம ஆசாரியமூர்த்திகளாகிய மணிவாசகப் பெருமான்
பலகாலம் தங்கித் தவஞ்செய்து நடேசப் பெருமானுடன் இரண்டறக்
கலந்தருளியதும், நந்தனாரெனுந் திருநாளைப்போவார் முத்திபெற்றதும்,
சமயாசாரியர்களும், சந்தானசாரியர்களும், நாயன்மார்களும் தொழுது
பாடியதும் ஆகிய பல விசேடங்கள் கொண்டது. விராட்புருடனுடைய
இருதயத்தான மாகியது. மற்றும் இதன் அளவிடற்கரிய பெருமைகளை
இப்புராணத்தினுள் ஆங்காங்கு வருமிடங்களிலும், பல புராணங்களிலும்,
தக்கார்வாய்க் கேட்டும் தெளிக. தலவிசேடமும் காண்க.
சித்தவடமடம்
(229) - நடுநாட்டில் திருவதிகை வீரட்டானத்திற்கு
வடமேற்கில் 3 நாழிகை யளவிலுள்ளது. பழைமையாகிய பொதுமடம்,
இப்போது அவ்விடத்திலொரு சிவாலயமுண்டு. சிவபெருமான் நம்பியாரூ
ரருக்குத் திருவடி தீக்கை செய்த மடம். அப்பர் சுவாமிகள் தேவாரத்திற்
பாராட்டப்பெற்றது.
சிவபெருமான்
- சேயவன் (8) (தழற்போற் சிவந்த திருமேனி
யுடையவன். செம்மை தருபவன், சிவன்.) - ஆதிதேவர் (20) - தம்பிரான்
(21 - 44 - 368) பிஞ்ஞகன் (21) (தலைக்கோலமுடையான்) - சடையான்
(21) - ஐயர் (22 - 38 - 251); சிவன் (23 - 286) பூதநாதன் (24) சம்பு
(29 - 90) (இன்பமாக்குபவன்) - மெய்ப்பொருளாகிய வள்ளல் (31)
ஈசன் (36) - ஆதிமூர்த்தி - (37) - அங்கனாளன் (39) (அழகிய
அருட்கண்ணுடையவன்) - நித்தன் (42); மாதொர் பாகன் (43 - 142) -
புராணன் (48) எம்பிரான் (57) - பரமன் (72) - அரன் (71) - அகில
காரணர் (139) - பூதநாயகர் (136) - அத்தர் (140) - தாண்டவப்
பெருமான் (145) அங்கணர் (147 - 542) - நாதன் (165) - மாலுமிருவர்க்கு
மரியர் (174) - நெற்றி விழியான் (182) - யாவரையும் வேறடிமையாவுடைய
எம்மான் (183) - பித்தன் (186 - 187 - 219) - பேயன் (187) - துணைவனார்
(188) - அந்தணாளன் (190) - (அந்தணன்) - பூவணத்தவர் (190) - இறைவன்
(191) - பிறைசூடி (220) - தேவர்பிரான் (224) - நிருத்தனார் (227 - 352)
தம்மான் (234) கைம்மாவினுரியான் (234) - வரந்தருவான் (237) -
ஆடுகின்றவர் (255) - விடையான் (258) - பிரான் (271) - பரம்பொருள்
(271) - பார்ப்பதிபாகன் (271) - கண்ணுதல் (291) - திருநடம்புரிவார்
(354) - மலைமகள் கேள்வன் (81) புண்ணியப்பொருளாய் நின்றான்
(385) - எல்லையிலான் (390) - வேத முதல்வர் (399) - தேவர்கடேவர்
(401) - சாதி வேதியர் (413) - வழித்துணை (418) - சங்கரன் (464) -
(இன்பம் செய்பவன்); இடபவாகனன் (464) சைவ சமயத்திற் பேசப்படும்
முழுமுதற் கடவுள். நிவிர்த்தி கலை முதலிய பஞ்சகலைகளுட்பட்ட
ஐவகைச் சங்காரத்துள் இறுதிக் கண்ணதாகிய மா சங்காரத்தைச் செய்யும்
வினைமுதலாயுள்ள முதல்வர். அவனவளது வென்று பகுத்துப் பலவாய்ச்
சுட்டி யுணரப்படுஞ் சொல்லும் பொருளுமாய இரு கூற்றுப் பிரபஞ்சத்
தொகுதி சங்கார காலத்தில் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற
தன்னிடத்தினின்றும், சகசமல நீங்காமையால், அதுநீங்குதற் பொருட்டு
மீளத் தோன்றுமாறு நிற்பவர். அவரே திதிக்கடவுளும் படைப்புக்
கடவுளும் தோன்றுதற்குக் காரணமானவர். இது அவரது பொது வியல்பாம்.
இப்பொருள் சிவசத்தா மென்பது ஞானநூல். பசுஞான பாச ஞானங்களால்
அறியப் படாமையிற் சிவமாம். பதிஞானத்தாலறியப்படுதலிற் சத்தாம்.
சிவசத்து என்பது சத்துச்சித்து என்னும் பொருளில் வந்தது. இவ்விரு
தன்மைகளும் சச்சிதானந்தம் என மூன்றாயும், முற்றுணர்வு முதலிய
ஆறாயும், எட்டாயும் விரியும். இவை இப்புராண முதற் செய்யுளில்
வைத்தோதினார் ஆசிரியர். விரிவு சிவஞானபாடிய 1-6 சூத்திரங்களுட்
காண்க. இவர் மும்மூர்த்திகளில் ஒருவரல்லர். நான்காவதாகிய பொருள் -
துரியமூர்த்தி - என்பது வேதம். "துரியங்