தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

கடந்த சுடர்த்தோகையுட னென்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான்" என்பது
திருக்களிற்றுப் படியார். ஒரு நாம மோருருவ மொன்றுமில்லார். ஆயினும்
அன்பர்க்கருளும் பொருட்டுப் பல நாமங்களும் பல உருவங்களும் தாங்கி
வருவர். முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். தன் வயத்தனாதல், தூய
உடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே
பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப
முடைமை என்ற எண் குணங்களுந் தமக்கேயுரியவர். நிலம், நீர், நெருப்பு,
கால், விசும்பு, நிலா, பகலோன், உயிர் என்ற அட்டமூர்த்தமாய் நிற்பவர்.
இவர்க்குத் தடை யிலா ஞானமாகிய மேனி; அருளே உரு. சத்தியே
திருமேனியாகக்கொண்டு வருவது உயிர்கட்கருளாற் பேரின்ப முத்தியளித்தற்
பொருட்டேயாம். பேரின்ப முத்தியாவது தன்னிலையினுள்ள எண்
குணங்களாகிய சிவத்துவ விளக்கமேயாம். "தன்னிலைமை மன்னுயிர்கள்
சாரத்தருஞ்சத்தி, பின்னமிலா னெங்கள் பிரான்" - திருவருட்பயன்.
அடியார்க்கருள வெளிப்படும். உருவங்கள் உருவநிலை. ஊர்தி வெள்ளேறு.
உமையொரு பாகமுடையார். என்றும் மன்னி வாழ்வது கயிலைத் திருமாமலை.
தேவர்கடேவர் திருவாரூரில் மனுச்சோழர்க்கு ஆவின் கன்று மூலம் அருள்
புலப்படுத்தினர். நம்பி ஆரூரரைக் கிழவேதியராக வந்து தடுத்தாட்
கொண்டவர். தில்லை வாழந்தணர்க்கு அம்பலத்தே ஆனந்தக் கூத்தராக
நின்று அவர்தம் பூசையினை ஏற்பவர். திருநீலகண்டர்பால் ஓடுவைத்து
மாற்றி, அவர் அயலறியாத வண்ணம் ஆணையுய்த்த செய்தியை உலகரறியச்
செய்தருளியவர். இயற்பகையார் பாற் றூயநீறு பொன்மேனியில் விளங்கத்
தூர்த்தவேட முந்தோன்ற வேதியராய் வந்து, அவர், இன்புறுதாரந் தன்னை
ஈசனுக் கன்பரென்றே துன்புறா துதவுந் தொண்டராம் பெருமையை, உலகில்
விளக்கியருளியவர். அன்புறு மனத்தானாதனடியவர்க் கன்புநீடிய
மாறநாயனார், நல்குரவான போதிலும் அவ்வாறே செலுத்த வல்லவர்
என்பதை, ஒரு அடியவராய் வந்து உலகிற்குக் காட்டியருளியவர். தமது
இன்னுயிர் செகுக்கக்கண்டும் "திருவேடமே மெய்ப்பொருள்" எனத் தொழுது,
"தத்தா நமர்" எனத் தடுத்த மெய்ப்பொருளார்க்குக் காட்சி கொடுத்துத் தம்
அருட்கழ னீழல் சேரக்கொண்டவா றிடையறாமற் கும்பிடுங் கொள்கை
யீந்தவர். அடியவர்தந் திண்மை யொழுக்க நடை செலுத்தித், தம்மையும்
புறகு என்ற, விறன்மிண்டர்க்குத் தந்தாணிழற்கீழ் மிக்க கணநாயகராகும்
தன்மை தந்தருளியவர். மறைக்குலப் பிரமசாரியாய் வந்து, அமர்நீதியாரிடம்
கோவணங் கொடுத்து, அதனை மறைத்து, அதற்கீடாக அவர் பொருள்க
ளனைத்தையும் அவர் குடும்பத்தையும் அவரையும் துலையிலேறச்செய்து,
அத்துலை யினையே விமானமாக்கி, அவரைச் சிவபுரியினிற் சேர்த்தருளியவர்.
இவ்வாறே மற்றை நாயன்மார்கள் சரிதங்களாலும் அறிக. இவரது இயல்பு
சொல்லுக்கடங்காமையின் இப்புராணத்துப் பலவிடத்தும் கூறிய தன்மைகளின்
வைத்து ஒருவாறு உணரத்தக்கது.

சிவலோகம் (223) - வீடு (402) - பேரின்பம் (402) - இறைவனுலகம்.

சிற்றம்பலம் (250 - 351 - 360) - திருஅம்பலம் (248) -
சிற்பரவியோமம் (351) - தில்லையம்பலம் (435) - தில்லைமன்று (470) -
கனகசபை, பொன்மாளிகை என்று பலவாறும் போற்றுவர். சிவபெருமான்
நித்தியானந்தத் தாண்டவம் புரியுமிடம்.

சீகாழி - தோணிபுரம் (46 - 259) - புகலி (258) - புறவம் (260) -
சோழநாட்டுத் தலங்களி லொன்று. பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு,
தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம்,
கழுமலம் என்னும் பன்னிரு பெயர்களையுடையது. இது பிரம புரீசுவரர்
ஆகிய இலிங்கம், தோணியப்பராகிய குரு. சட்டை நாதராகிய சங்கமம்
என்னும் மூவுருவோடும் இறைவன் விளங்குகின்ற பெருமையுடையது.
திருஞானசம்பந்த சுவாமிகள் அவதரித்து அம்மையார் திருமுலைப்பா
லுண்டருளிய தலம். ஆளுடைய பிள்ளையார். அவதரித்த தலமாதலின்
"உள்ளு நான் மிதியேன்" என்று அஞ்சி நம்பியாரூரர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:57:33(இந்திய நேரம்)